James Cameron on SS Rajamouli: ஆர்ஆர்ஆர் படம் குறித்து ராஜமெளலியிடம் 10 நிமிடம் உரையாடிய ஜேமஸ் கேமரூன்! என்ன பேசினார்?
பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் சேட்டர்ன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் சுவாரஸ்ய உரையாடலை நிகழ்த்தியுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற சேட்டர்ன் விருது நிகழ்ச்சியில் முன்னணி திரைப்பட இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், எஸ்எஸ் ராஜமெளலி ஆகியோர் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து நிருபர் ஒருவர் ஜேமஸ் கேமரூனிடம், நான் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய ராஜமெளலியிடம் நீங்கள் சந்திப்பு நிகழ்த்தியதை பார்த்தேன். அதுபற்றி தெரிவிக்க முடியுமா என விசாரித்துள்ளார். அதில், "நான் அவரிடம் நேர்மையாக சில விஷயங்களை அப்போது பேசினேன். அவரது படம் அற்புதமான படைப்பாக உள்ளது. இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பரந்த வரவேற்புடன் கிடைப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
ஜேமஸ் கேமரூனின் இந்த கருத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆர்ஆர்ஆர் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், " உங்களின் விலைமதிப்பற்ற வார்த்தைகள், எப்பொழுதும் சிறப்பாக செயல்பட, சிறந்தவர்களாகவும் இருக்க எங்களை தூண்டுகிறது.
இந்திய சினிமா அனைத்து எல்லைகளையும் உடைத்து அதன் முழு வளர்ச்சியை சென்றடையும் என உறுதியாக நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.