தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vanangaan Actress Mamitha Baiju Disseminates Rumours About Her Mistreatment By Director Bala

Mamitha Baiju: ‘மனரீதியாவோ; உடல்ரீதியாவோ.. பாலா சார் என்ன அப்படி..’ - வணங்கான் சர்ச்சைக்கு மமிதா விளக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 01, 2024 07:21 AM IST

“இது தொடர்பான செய்தியை வெளிடும் முன்னர் என்னை தொடர்பு பேசிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” - மமிதா பைஜூ!

இயக்குநர் பாலா!
இயக்குநர் பாலா!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து அந்தப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில் சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை மமீதா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார். இந்தப்பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், “ நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் நடித்த வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை. 

நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.

அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார். அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். 

நான் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான். இது தொடர்பான செய்தியை வெளிடும் முன்னர் என்னை தொடர்பு பேசிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்