GV Prakash Kumar: கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்! தமிழ் பற்றிய கதை - ரெபல் படம் குறித்து ஜிவி பிரகாஷ் பேச்சு
இயக்குநர் நிகேஷின் உறவினர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணி தான் ரெபல். தமிழ் பற்றி பேசும் கதையாக இந்த படம் உள்ளது என்று ஜி.வி. பிரகாஷ் குமார்.
ஜிவி பிரகாஷ் குமார் - பிரேமலு படப் புகழ் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியிருக்கும் காதல், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் ரெபல். படத்தை புதுமுக இயக்குநர் நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியதாவது: "தமிழ் பற்றி பேசும் கதையாக ரெபல் படம் உள்ளது. இந்த கதையில் நடிக்க என்னிடம் அணுகியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் நிகேஷின் உறவினர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தில் கதாநாயகியாக வரும் மமிதா பைஜு சிறப்பாகவும், அழகாகவும் தனது கதாபாத்திரத்தை செய்துள்ளார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர் டார்லிங் படம் மூலம் நடிகனாக வாழ்க்கையை தொடங்கி வைத்தார்கள். தற்போது நீண்ட காலம் கழித்து அந்த நிறுவனம் தயாரிப்பில் நடித்துள்ளேன்.
இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்றியிருக்கும் தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவர் தயாரிப்பில் இன்னொரு படம் பணியாற்றுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனதுக்கு நெருக்கமான படம்
படத்தில் கதாநாயகியாக வரும் மமிதா பைஜு சிறப்பாகவும், அழகாகவும் தனது கதாபாத்திரத்தை செய்துள்ளார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர் டார்லிங் படம் மூலம் நடிகனாக வாழ்க்கையை தொடங்கி வைத்தார்கள். தற்போது நீண்ட காலம் கழித்து அந்த நிறுவனம் தயாரிப்பில் நடித்துள்ளேன்.
இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்றியிருக்கும் தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவர் தயாரிப்பில் இன்னொரு படம் பணியாற்றுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது"
விழாவில் நடிகை மமிதா பைஜு பேசியதாவது: "எனது முதல் தமிழ்ப்படம் ரெபல். மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக உள்ளது.
படத்தில் பணியாற்றிய அனைவரும் அர்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். படம் அருமையாக வந்துள்ளது. எல்லோரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்" என்றார்.
ரெபல் கதை
1990களில் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கருணாஸ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கல்லூரி வினோத் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கேரளாவில் அமைந்திருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் தமிழ் மாணவர்களை எதிரணி கும்பல், உள்ளூர் அரசியல் புள்ளிகளுடன் இணைந்து கொடுமைப்படுத்துகிறார்கள். கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலுக்கு எதிராகவும் தமிழுக்கான உரிமையை மீட்டெடுக்கும் விதமாகவும் படத்தின் திரைக்கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் மற்றொரு படமான கள்வன் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக லவ் டுடே இவானா, பாரதிராஜா உள்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் புரொமோஷனும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்