தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hansika Motwani: ‘ஹன்சிகாவிற்கு வில்லனாகும் ஆரி’ ‘மேன்’ இயக்குநர் இகோர் பேட்டி!

Hansika Motwani: ‘ஹன்சிகாவிற்கு வில்லனாகும் ஆரி’ ‘மேன்’ இயக்குநர் இகோர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 09, 2023 01:57 PM IST

இயக்குநர் இகோர் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ‘மேன்’ படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது

ஹன்சிகா
ஹன்சிகா

ட்ரெண்டிங் செய்திகள்

ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிகர் ஆரி முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார். இந்த படம் குறித்து இயக்குநர் இகோர் கூறும் போது, “ ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப் போரை உள்ளடக்கியதே இந்த படத்திற்கு ‘மேன்’ என்ற வைத்ததிற்கான காரணம்.

ஹன்சிகா
ஹன்சிகா

ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு பார்த்திராத ஹன்சிகாவை ரசிகர்கள் திரையில் பார்ப்பீர்கள். ஆரி அர்ஜுனன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்; அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. அத்தகைய எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க அவருக்கு நிறைய தைரியம் தேவை” என்றார்.

’மேன்’ திரைப்படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். '96' படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த மணிகண்டன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை சரண்யா பாக்யராஜ் எழுதியுள்ளார்.

படப்பிடிப்பில் இயக்குநர் இகோர்
படப்பிடிப்பில் இயக்குநர் இகோர்

பொன் பார்த்திபன் படத்திற்கு மிக அழுத்தமான வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர்களான நைஃப் நரேன் மற்றும் பிரபு ஆகியோர் கையாண்டுள்ளனர். சிக்மண்ட் பிராய்டின் கோட்பாட்டின் கூறுகளை உள்ளடக்கி 'ஆண்மை' என்ற அகங்காரக் கருத்துக்குப் பின்னால் உள்ள உளவியலை வெளிக்கொண்டு வர முயற்சியை இந்த படத்தில் இயக்குநர் கையாண்டு இருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்