ஐயோ அது தமிழே இல்ல.. புஷ்பா பாட்டுக்கு இது அர்த்தம் இல்ல.. என்ன நம்புங்க- விளக்கும் பாடலாசிரியர் விவேகா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஐயோ அது தமிழே இல்ல.. புஷ்பா பாட்டுக்கு இது அர்த்தம் இல்ல.. என்ன நம்புங்க- விளக்கும் பாடலாசிரியர் விவேகா

ஐயோ அது தமிழே இல்ல.. புஷ்பா பாட்டுக்கு இது அர்த்தம் இல்ல.. என்ன நம்புங்க- விளக்கும் பாடலாசிரியர் விவேகா

Malavica Natarajan HT Tamil
Dec 22, 2024 03:16 PM IST

புஷ்பா 2 படத்தில் வரும் பாடலின் வரிகள் சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என பாடலாசிரியர் விவேகா விளக்கம் அளித்துள்ளார்.

ஐயோ அது தமிழே இல்ல.. புஷ்பா பாட்டுக்கு இது அர்த்தம் இல்ல.. என்ன நம்புங்க- விளக்கும் பாடலாசிரியர் விவேகா
ஐயோ அது தமிழே இல்ல.. புஷ்பா பாட்டுக்கு இது அர்த்தம் இல்ல.. என்ன நம்புங்க- விளக்கும் பாடலாசிரியர் விவேகா

பாக்ஸ் ஆபிஸில் தாக்கம்

பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட்டுள்ள புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என பலரும் கூறி வந்த நிலையில் இந்தப் படம் உலகளவில் ரூ. 1500 கோடி எனும் இலக்கை வெளியான 20 நாளுக்குள் அடைந்து விடும் என்ற வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழை விச ஹிந்தியில் பயங்கர ஹிட் அடித்துள்ளது.

ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன்பிறகு அல்லு அர்ஜூன் புஷ்பா 2வில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல், முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களின் உழைப்புக்கு படம் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

ரசிகர் கொண்டாட்டத்திற்கான களம்

புஷ்பா 2 படத்தின் வெற்றி அதன் தடுக்க முடியாத வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும் 2024ம் ஆண்டில் ரசிகர்கள் சினிமாவை இறுதியாக கொண்டாட ஒரு களம் அமைத்து தருகிறது. ஏற்கனவே புஷ்பா திரைப்படம் பான்-இந்தியா அளவில் சில சாதனைகளை படைத்தது. இதையடுத்து, புஷ்பா 2 படமும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கவும், சினிமாவுக்கான உயரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தவும் தயாரானது.

ட்ரெண்டாகும் பீலிங்கு பாட்டின் பின்கதை

இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தில் வெளியான வந்துச்சே பீலிங்கு பாடல், வெளியான உடனேயே அதன் நடன அசைவுகளால் பலரையும் கவர்நது இழுத்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆஸ்தான பாடலாசிரியரான விவேகா தான் எழுதி இருந்தார். முதலில் பாடலில் இசையையும், நடனத்தையும் கொண்டாடி வந்த மக்கள் பின்னாளில் அது தமிழ் காப்பியமான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்நாடை எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

எல்லாம் தப்பா சொல்லிட்டு இருக்காங்க

இதையடுத்து, இந்த பாடலின் ஆசிரியர் விவேக் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விகடன் பத்திரிகையில் பேசுகையில், "புஷ்பா 2வில் வரும் பீலிங்கு பாடல் வரிகள் நெடுநல்வாடை வரிகளே இல்லை. எல்லாரும் தவறான தகவல்களை பரப்புறாங்க. கங்குவா படத்திற்காக நான் எழுதிய பாடல்களில் இலக்கிய வரிகளை பயன்படுத்தினேன். அதனால இந்தப் படத்துலயும் நான் அப்படி எழுதிருப்பேன்னு சொல்றாங்க. பாட்டில் தொடக்கத்தில் வரும் மல்லிக பாணத்து அம்புகளோ கண்முன தும்புகளோ என்ற வரி மலையாளத்தில் எழுதப்பட்டது. இப்போ நெறைய பான் இந்தியா படங்கள் வர்றதுனால நான் எல்லா மொழிகள்லயும் பாட்டு எழுதுறேன் " என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.