புஷ்பா 2.. வந்துச்சே பீலிங்ஸ் பாடல் அவுட்.. ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் கலந்த குத்தாட்டம்போட்ட அல்லு அர்ஜூன்
புஷ்பா 2.. வந்துச்சே பீலிங்ஸ் பாடல் அவுட்.. ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் கலந்த குத்தாட்டம்போட்ட அல்லு அர்ஜூன் உடைய பாடல் வைரல் ஆகி வருகிறது.

புஷ்பா 2 திரைப்படத்தின் வந்துச்சே பீலிங்ஸ் பாடல் வெளியானது. இப்பாடலில் ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் குத்தாட்டம் போட்டிருக்கிறார், அல்லு அர்ஜூன்
புஷ்பா படம் எத்தகையது?
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல், முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
மேலும், புஷ்பா: தி ரைஸ் (2021) பல இதயங்களை வென்றதற்கு ஒரு முக்கியக் காரணம், படத்தில் புஷ்பராஜூவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.