சறுக்கும் வசூல்.. தொடரும் சிக்கல்.. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சறுக்கும் வசூல்.. தொடரும் சிக்கல்.. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

சறுக்கும் வசூல்.. தொடரும் சிக்கல்.. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

Malavica Natarajan HT Tamil
Dec 22, 2024 08:15 AM IST

புஷ்பா 2 பட விவகாரத்தில் தொடர்ந்து அல்லு அர்ஜூன் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் வசூல் குறைந்து வருகிறது.

சறுக்கும் வசூல்.. தொடரும் சிக்கல்.. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..
சறுக்கும் வசூல்.. தொடரும் சிக்கல்.. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

மாஸ் ஓபனிங்

புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்தது. மேலும் புஷ்பா 2 படமே இதுவரை அதிக வசூல் செய்த படமாகும். இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவியூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்த்து இவ்வளவு வசூல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 17வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 1198.3 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 17வது நாளான நேற்று சுமார் ரூ.1435.3 கோடி வசூலை ஈட்டியுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குவித்து வருகிறது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக புஷ்பா 2 படத்தின் வசூல் வேகம் குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா படத்தின் அடுத்த அப்டேட்

கடந்த டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான புஷ்பா 2 படம் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து ரூ.1,200 கோடியை நெருங்கி வருகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் கேரியரில் சிறந்த படமான புஷ்பா 2வை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தை 3டி வெர்ஷனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு

சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர்.

ஆனால், அந்த சினிமா பிரமுகரில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைச் சென்று பார்க்கவில்லை. இதனால் சினிமாவில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

விளக்கமளித்த அல்லு அர்ஜூன்

இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன்.

அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம்.

இருபது வருஷமாக என்னை நீங்கள் பார்க்கிறீர்கள் தானே. நான் என்றைக்காவது அப்படி செய்திருக்கிறேனா?. அதனால் இந்த அணுகுமுறை ரொம்ப வேதனையைத் தருது. குறிப்பாக, என் கேரக்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வேதனையைத் தருது. யார் யாரோ இறந்ததை எல்லாம் நான் போய் விசாரிக்கும்போது எனது சொந்த ரசிகை இறந்ததை விசாரிக்காமல் இருப்பேனா’’என அல்லு அர்ஜூன் விளக்கமளித்துள்ளார்.

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.