Lubber Pandhu: இது அர்ஜென்டுக்கு பண்ண கதை.. அந்த 20 நிமிஷம் தான்.. உண்மையை உடைத்த டைரக்டர்!
Lubber Pandhu: அட்டகத்தி தினேஷ்- ஹரின் கல்யாண் நடிப்பில் வெளியாகிய லப்பர் பந்து திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்தப் படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்து கூறியுள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர் தமிழரசன்.

இந்திய இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். தன் சிறுவயது முதலே வயது வித்யாசமின்றி அனைவருடனும் கிரிக்கெட் விளையாடி அனுபவம் அவர்களுக்கு இருக்கும். இதனாலேயே, இளைஞர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான படம் என்றால் அதில், தங்களது சிறு வயது நினைவுகள் ஏதேனும் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை பார்க்க துடிப்பர்.
அதுமட்டுமின்றி, படத்தை பார்த்துவிட்டு வந்த பிறகும் அந்தப் படத்தில் வந்த காட்சிகளை நண்பர்களுடன் மனம் விட்டு விவாதிப்பர். இதன் காரணமாகவே, பெரும்பாலான கிரிக்கெட் திரைப்படங்கள் வெற்றி பெறும்.
அப்படி இருக்க, தமிழ்நாட்டில் அதுவும் ஊரில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் குறித்து எடுக்கப்பட்ட படம் என்றால் சொல்லவா வேண்டும். இளைஞர்களின் உணர்வுகளை தீவிரமாகவும் மிக எதார்த்தமாகவும் கூறிய திரைப்படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது அறிமுக இயக்குநகர் தமிழரசனின் லப்பர் பந்து. அதிலும் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட திருமணமான ஆண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதையும் லப்பர் பந்து படம் காட்டியுள்ளது.