Lubber Pandhu: ப்ளு சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் - இரண்டு நாளில் அசுர வசூலில் லப்பர் பந்து-lubber pandhu movie box office collection report on day 2 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lubber Pandhu: ப்ளு சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் - இரண்டு நாளில் அசுர வசூலில் லப்பர் பந்து

Lubber Pandhu: ப்ளு சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் - இரண்டு நாளில் அசுர வசூலில் லப்பர் பந்து

Aarthi Balaji HT Tamil
Sep 22, 2024 09:18 AM IST

Lubber Pandhu: லப்பர் பந்து படத்திற்கு தமிழ்நாட்டில் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பால் படிபடியாக உயர்ந்து 300 திரையரங்குகளில் தற்போது ஒடிக் கொண்டு இருக்கிறது.

Lubber Pandhu: ப்ளு சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் - இரண்டு நாளில் அசுர வசூலில் லப்பர் பந்து
Lubber Pandhu: ப்ளு சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் - இரண்டு நாளில் அசுர வசூலில் லப்பர் பந்து

முதலில் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பால் படிபடியாக உயர்ந்து 300 திரையரங்குகளில் தற்போது ஒடிக் கொண்டு இருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இந்நிலையில் லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. முதல் நாள் 75 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்யப்பட்டது.

இரண்டாம் நாள் வசூல்: ரூ. 1. 35 கோடியில் இருந்து ரூ.1. 75 கோடி வரை வசூல்

மொத்தமாக இரண்டு நாட்களில் 2. 10 கோடி ரூபாயில் இருந்து 2.50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கும் என கூறப்படுகின்றது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

வழக்கமாக எதிர்மறையான கருத்து சொல்லும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் லப்பர் பந்து படத்திற்கு மிகவும் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்து இருக்கிறார். அதுவே படத்திற்கு மிகவும் பிளஸ் பாயிண்டாக அமைந்து இருக்கிறது.

லப்பர் பந்து படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறுகையில், " லப்பர் பந்து படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியிலும் கதை சிறப்பாக அமைத்து இருக்கிறார் இயக்குநர். தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வெளிவந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

ஒரு ஹீரோவுக்கும், இன்னொரு ஹீரோவுக்கும் இடையில் இருக்கும் மோதல் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற திரைக்கதையில் விறுவிறுப்பு காட்டி இருக்கிறது. சாதி பிரச்னை என காண்பிக்காமல் சாதிய சமத்துவம் பேசி இருக்கிறார்கள் “ என்றார்.

கதை இது தான்

கிரிக்கெட்டை விரும்பும் இரு ஆண்களுக்கு இடையே நடக்கும் மோதலை உள்ளடக்கிய வழக்கமான விளையாட்டு நாடகமாக இப்படம் தொடங்குகிறது. பூமாலை அக்கா கெத்து (அட்டகத்தி தினேஷ்) ஒரு கடினமான பேட்ஸ்மேன் மற்றும் உள்ளூர் ஜாம்பவான் என்றாலும், அன்பு (ஹரிஷ் கல்யாண்) ஒரு வல்லமைமிக்க பந்துவீச்சாளர், அவர் தனது பெயரை உருவாக்கத் தொடங்குகிறார்.

சாதிகளை கடந்து வெற்றி

இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் நாம் முதலில் சந்திக்கும் போது, ​​கெத்து ஒரு திருமணமான இளைஞன், அவர் தனது மனைவி அசோதாயின் (ஸ்வாசிகா) கோபத்தை சம்பாதிப்பதில்லை. ஆனால் அவரது பொறுப்பற்ற தன்மையால் விரக்தியடைகிறார். அன்பு ஒரு பள்ளி மாணவன், உள்ளூர் கிரிக்கெட் அணியான ஜாலி பிரண்ட்ஸ் அணிக்காக விளையாடப் போகிறான், ஆனால் அந்த அணியின் ஆதிக்க சாதி வீரர்களால் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் எப்படி சாதிகளை கடந்து வெற்றி அடைவார் என்பதே கதையாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.