தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Release: இந்த வாரம் ஓடிடியில் கலக்க காத்திருக்கும் படங்கள்

OTT Release: இந்த வாரம் ஓடிடியில் கலக்க காத்திருக்கும் படங்கள்

Aarthi V HT Tamil
Jun 15, 2023 12:08 PM IST

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

குட் நைட் திரைப்படம்
குட் நைட் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபேக்கா, பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், குட் நைட். நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து இருக்கும் இதில் ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். குட் நைட் படம் வரும் 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

ஃபர்சானா

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து கடந்த மாதம் வெளியான ஃபர்சானா ரசிகர்களை கவர்ந்து விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் கால் சென்டரில் பணிபுரிய, அவருக்கு வரும் சில போன் அழைப்புகளால் வாழ்க்கையில் நிகழும் தலைகீழ் மாற்றத்தை விவரிக்கும் விதமாக படத்தின் கதை அமைந்துள்ளது. சோனி லைவ் தளத்தில் ஜூன் 16 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.

பிச்சைக்காரன் 2

பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இந்தப் படம் ‘பிச்சகாடு 2’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 45 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டார் விஜய் ஆண்டனி. டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் ஜூன் 17 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’தமிழரசன்’ திரைப்படம், ஜீ5 தளத்தில் ஜூன் 16 அன்று வெளியாகிறது.

இராவண கோட்டம்

மதயானை கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி கடந்த மாதம் வெளியான படம் ராவணக்கோட்டம். இவர்களுடன் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபேக்கா, பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் தளத்தில் ஜூன் 16 ஆம் தேதி படம் வெளியாகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்