தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott This Week: சூப்பர் ஹிட் படங்கள்.. இந்த வாரம் ஓடிடியில் கலக்கிய படங்கள்!

OTT This Week: சூப்பர் ஹிட் படங்கள்.. இந்த வாரம் ஓடிடியில் கலக்கிய படங்கள்!

Aarthi V HT Tamil
Nov 05, 2023 11:55 AM IST

ஓடிடியில் இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடி
இந்த வாரம் ஓடிடி

ட்ரெண்டிங் செய்திகள்

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம், செப்டம்பர் 7ஆம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்திலும், வில்லனாக விஜய் சேதுபதியும், தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தனர். இந்தியாவில் படம் வெளியான அன்றைய தினம், படமானது 75 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் நவம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

தமிழ்க் குடிமகன்

இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் படம், தமிழ்க் குடிமகன். இந்த படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. இதில் சேரன், லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். இந்த படம் Aha ஓடிடி தளத்தில் நவம்பர் 3 ஆம் தேதி வெளியானது.

ஆர் யூ ஓகே பேபி

நடிகையாக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கிய படம் ' ஆர் யூ ஓகே பேபி? '. இப்படம் செப்டம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதில் சமுத்திரக்கனி, அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 31 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ரத்தம்

சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவான ரத்தம் படம், செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியானது. க்ரைம் த்ரில்லரான இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரத்தம் படம் நவம்பர் 3 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் தளத்தில் ரிலீஸானது.

இறுகப்பற்று

நடிகர்கள் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்நதி, விதார்த், ஸ்ரீ, சானியா ஐயப்பன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம், இறுகப்பற்று. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியான இந்த படம், நவம்பர் 6 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்