"தனுஷ் விவாகரத்துக்கு லதா ரஜினி தான் காரணம்! சொத்துக்கு ஆசைப்பட்டு மகளின் வாழ்க்கையில் விளையாடினார்" - பத்திரிகையாளர்
ரஜினியின் சொத்தை தனுஷ் அழித்துவிடுவார் என்ற பயத்தில் தான் லதா ரஜினிகாந்த் தன் மகளை விவாகரத்து வாங்க நிர்பந்தித்தார் என தமிழா தமிழா பாண்டியன் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.
நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விவாகரத்து பெற மாட்டார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறி விவாகரத்தும் பெற்றனர். இது திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், மேலும் சில அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கிங்உட்ஸ் நியூஸ் எனும் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தான் இப்போது வைரலாகி வருகிறது. அவர் இவர்களின் விவாகரத்து குறித்து பேசுகையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்குள் கருத்து வேறுபாடு வர காரணமாக அமைந்ததே நானும் ரவுடி தான் படம் தான்.
நயன்தாரா படத்தால் பிரச்சனை
தனுஷ் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் குறைவான பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தார். அப்படித் தான் 6 கோடி பட்ஜெட்டுடன் வந்த விக்னேஷ் சிவனுக்கு நானும் ரவுடி தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். ஆனால், படம் 16 கோடி ரூபாய் வரை செலவை இழுத்து விட்டதால், தனுஷ் இதற்காக கடன் வாங்கியுள்ளார். விநியோகத்திலும் இந்தப் படம் இழப்பை தந்ததால் அவர் வீட்டில் பிரச்சனை வந்துள்ளது.
அத்துடன், தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா அவரது படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அதுவும் ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது. இப்படி, தனுஷூம் அவரது அப்பாவும் வாங்கும் கடனுக்கு ரஜினி பொருப்பாக மாறக் கூடாது என லதா ரஜினிகாந்த் நினைத்தாராம்.
லதா ரஜினியின் திட்டம்
இதனால், அவரது சொந்த பந்தங்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறியபோது அனைவரும் தனுஷிடமிருந்து ஐஸ்வர்யாவை பிரித்தால் தான் இதெல்லாம் சரியாக வரும் என அறிவுறுத்தினராம். இதனால், தனுஷை நம்பி இருந்தால், உன்னுடைய எதிர்காலமும், பிள்ளையின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும் எனக்க கூறி ஐஸ்வர்யாவின் மனதை லதா மாற்றியுள்ளாராம்.
தனுஷ் குடும்பத்தை ஒதுக்கிய ரஜினி
அத்துடன் நில்லாமல், கடன்காரர்களின் தொல்லையால், ரஜனிகாந்த் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருந்தார் எனக் கூறுகிறார். இப்போது இருவரும் சட்டப்பூர்வமாக பிரிந்ததால், ரஜினியின் சொத்துகள் நேரடியாக அவரது மகளுக்கும் பேரன்களுக்கும் சென்றுவிடும் என ரஜினி குடும்பம் நிம்மதி அடைந்ததாக கூறுகிறார் பாண்டியன்.
சேர்ந்து வாழ விரும்பிய தனுஷ்
முன்னதாக ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், நயன்தாராவின் அறிக்கை அவர்களின் பிரிவுக்கு காரணமாக இருந்தது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷுக்கு 2ம் திருமணம்
இவர்கள் சேர்ந்து வாழ விருப்பப்பட்டதால் தான் நீதிமன்றத்தில் ஆஜராவதை தள்ளிப் போட்டனர் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தனுஷ் 2ம் திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் மருத்துவரான அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றும் தற்போது புது வதந்திகள் பரவி வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்