Rajinikanth Latha love: ‘ரஜினி தான் வேணும்..’ விடாப்பிடியாக நின்ற லதா.. விட்டுக்கொடுக்காமல் முடிச்சு போட்ட ரஜினி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth Latha Love: ‘ரஜினி தான் வேணும்..’ விடாப்பிடியாக நின்ற லதா.. விட்டுக்கொடுக்காமல் முடிச்சு போட்ட ரஜினி!

Rajinikanth Latha love: ‘ரஜினி தான் வேணும்..’ விடாப்பிடியாக நின்ற லதா.. விட்டுக்கொடுக்காமல் முடிச்சு போட்ட ரஜினி!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 13, 2023 05:30 AM IST

“ரஜினிகாந்திற்கும், அந்த சமயத்தில் நாமும் ஒரு குடும்பமாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. லதாவை சந்தித்த போது, அவர் போன்ற ஒரு பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று நினைத்திருக்கிறார்.” - ஒய்.ஜி.மகேந்திரன்!

லதா ரஜினிகாந்த்!
லதா ரஜினிகாந்த்!

அவர்களது திருமணத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை லதா ரஜினிகாந்தின் சகோதரி கணவரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, “ஒரு நாள் திடீரென்று லதா என்னை அழைத்து, கல்லூரி இதழுக்கு ரஜினிகாந்த் நேர்காணல் வேண்டும் என்று கேட்டார். அந்த சமயத்தில் ரஜினி எனக்கு நல்ல பழக்கம். 

அப்போது தில்லுமுல்லு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் நான் முதல் முறையாக லதாவை ரஜினியிடம் அறிமுகப்படுத்தினேன். லதா ரஜினிகாந்தை சந்திக்க வரும்பொழுதே, அவர்தான் தனக்கான கணவர் என்பதை தெளிவாக உறுதிப்படுத்தி விட்டு வந்திருக்கிறார். அதற்கான காரணம் தெரியவில்லை. ரஜினியை பார்க்கும் போது லதாவிற்கு அப்படியான உணர்வு வந்திருக்கிறது. 

ரஜினிகாந்திற்கும், அந்த சமயத்தில்  நாமும் ஒரு குடும்பமாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. லதாவை சந்தித்த போது, அவர் போன்ற ஒரு பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று நினைத்திருக்கிறார்.    

லதாவும் ரஜினிகாந்தை கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் என்னை ஃபோனில் அழைத்து, லதாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்.

நானோ நடிகை லதாவை தான் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு, தாராளமாக கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவர்களிடமே நேரடியாக பேசுங்கள் என்று சொன்னேன். 

உடனே அவர் கொஞ்சம் நிறுத்தி, நான் உங்களுடைய மனைவியின் சகோதரியான லதாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொன்னார். இதனையடுத்து இரு குடும்பத்தாரையும் நான் சந்திக்க வைத்தேன். 

இரு குடும்பத்தாரும், ஒருவரை ஒருவர் பேசி தெரிந்து கொண்டார்கள். ரஜினிகாந்த் அந்த சந்திப்பில் மிகவும் வெளிப்படையாக தன்னுடைய நிறை, குறை என அனைத்தையும் கூறினார். அதன் பின்னர் கல்யாணம் நடந்தது” இவ்வாறு அவர் பேசினார். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.