இருவரிடமும் நடந்த ரகசிய விசாரணை..பிரிவதில் உறுதி! தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
பிரிவதில் உறுதியாக இருந்த நிலையில், இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

இருவரிடமும் நடந்த ரகசிய விசாரணை..பிரிவதில் உறுதி! தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
கோலிவுட் ஸ்டார் தம்பதிகளாக இருந்து வந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து
இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்பட்டது. அதன்படி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் தேதி இந்த விவகாரத்து வழக்கின் விசாரணையின்போது, தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஆஜராகினர். அப்போது கதவுகள் அடைக்கப்பட்டு இருவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதன் பின்னர் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது விவாகரத்து வழங்க தீர்பளிக்கப்பட்டுள்ளது.