விக்னேஷ் சிவன் செய்த வேலையால் நஷ்டமடைந்த தனுஷ்.. இது காப்பிரைட் சண்டை மட்டும் அல்ல..
நயன்தாராவிற்கும் தனுஷிற்கும் இடையே நடக்கும் மோதல் வெறும் 3 வினாடி வீடியோவிற்கானது மட்டும் அல்ல என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். சினிமாவிலிருந்து விலக நினைத்த நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரானதற்கு பின் இருக்கும் கதையைப் பார்க்கலாம்.
தான் நடித்த நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளையும் பாடல்களையும் நயன்தாராவால் பயன்படுத்த முடியவில்லை என்ற கோவத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கு எதிராக பெரிய கடிதம் ஒன்றை எழுதியதுடன் அதில் தனுஷ் பொது வெளியில் தன்னை எப்படி காட்டிக் கொள்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எங்கு திரும்பினாலும் நயன்தாரா தனுஷ் பிரச்சனை
இவரது கடிதம் வெளியான சில மணி நேரத்திலேயே இந்தியாவில் பரபரப்பை கிளப்பியது. பார்க்கும் இடமெல்லாம் தனுஷ்- நயன்தாராவிற்கு என்ன ஆனது என்ற பேச்சுக்கள் தான் அடிபட்டது. அப்படி இருக்கையில், தனுஷுடன் இணைந்து பணியாற்றிய பல நடிகைகளும் நயன்தாராவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, இது வெறும் 3 வினாடி வீடியோவிற்காக எழுதப்பட்ட கடிதம் அல்ல. இது தனிநபர் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்ததால், அவர்களும் இதுபோன்ற செய்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பேச்சுகள் எழுந்தன.
நயன்தாரா வாழ்க்கையை மாற்றிய படம்
நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாராவின் கெரியரில் ஒரு மைல்கல். இது அவரது வாழ்க்கையையே மாற்றிய படம். நயன்தாரா தனது நடிப்பின் மூலம் தான் ஒரு திறமையான நடிகை என்பதை இப்படம் மூலம் தான் நிரூபித்தார். இந்த படம் அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இருப்பினும், அதே நேரத்தில், தனுஷுடனான நயன்தாராவின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையையே மாற்றியது என்றே கூறலாம்.
சினிமாவை விட்டு விலக நினைத்த நயன்தாரா
தெலுங்கு படமான ஸ்ரீராம ராஜ்யம் படத்திற்கு பிறகு நயன்தாரா சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஏனென்றால் சிலம்பரசன் மற்றும் பிரபுதேவாவுடனான அவரது காதல் உறவு பற்றி பலரும் மிக மோசமான கருத்துகளை வெளிப்படுத்தி வந்த சமயம் அது.
அதனால் தான் அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது சினிமாவை விட்டு விலகுவது பற்றி பேசினார். 2013 ஆம் ஆண்டில் இயக்குனர் அட்லீ ராஜா ராணி படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ராஜா ராணி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து வந்த சில படங்கள் நயன்தாராவிற்கு சிறப்பான வெற்றியைத் தரவில்லை.
தொட்டதெல்லாம் தங்கம்
இரண்டு வருடங்கள் கழித்து நயன்தாரா தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது. தனி ஒருவன், மாயா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் நயன்தாரா. சிசானிமா என்ற இன்வெஸ்டிகேட் த்ரில்லர் படமான மாயா படத்தில் நயன்தாரா மிகவும் திறமையாக நடித்து மக்களை அச்சமூட்டி இருப்பார்.
காதலில் விழுந்த நயன்தாரா
2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் தந்தையை இழந்த ஆதரவற்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க உள்ளூர் ரவுடி பாண்டியின் (விஜய் சேதுபதி) உதவியை நாடும் அவளைச் சுற்றி கதை சுழல்கிறது. இந்த படத்தில் நடிக்கும் போது தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். இப்போது அது திருமணம், குழந்தைகள், குடும்பம் என அழகான உறவாக மாறியுள்ளது.
மிகவும் ஸ்பெஷலான படம்
ஆனால், அவர்கள் காதலித்து வந்த சமயத்தில் நயன்தாரா பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். அவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் பல பொது வெளிக்கு வந்தது. ஆனால். அத்தனை இறுக்கமான சூழலிலும் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு ஆதரவாக இருந்தார். இதனால், தனக்கு மிகவும் ஆதரவான காதலனை அளித்த திரைப்படம் என்பதால் நானும் ரவுடி தான் படம் இருவருக்கும் மிகவும் ஸ்பெஷலானது.
தனுஷ்- நயன்தாரா நல்ல நண்பர்கள்
நான் ரவுடிதான் படத்திற்கு முன்பு நயன்தாராவும் தனுஷும் நல்ல நண்பர்களாக இருந்தனர். யாரடி நீ மோகினி படத்தில் இருவரும் இணைந்து தான் நடித்தனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒன்றாகத் தான் தங்கியிருந்தனர். இந்நிலையில் தான், விக்னேஷ் சிவனுக்கு திரைத்துறையில் வாய்ப்பளிக்கும் விதமாக நயன்தாராவை கதாநாயகியாக வைத்து நானும் ரவுடி தான் படம் எடுக்குமாறும் அதை தானே தயாரித்து தருவதாகவும் தனுஷ் கூறினார்.
பல ஆண்டுகளாக உலாவும் வதந்தி
இந்தப் படம் வெற்றி பெற்றாலும், அது தனுஷிற்கு மகிழ்ச்சியை தரவில்லை என படம் வெளியான சமயத்திலேயே பல வதந்திகள் வந்தன. காரணம், படத்தின் பட்ஜெட் குறிப்பிட்ட அளவை விட தாண்டிச் சென்றது. நானும் ரவுடிதான் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றாலும் அது, தயாரிப்பாளர் தனுஷுக்கு லாபகரமானதாக இல்லை. படப்பிடிப்பு தாமதமானதாலும், பட்ஜெட் அதிகரித்ததாலும் தனுஷ் குறைந்த விலைக்கு படத்தை விற்க வேண்டியதாயிற்று.
தனுஷுக்கு நஷ்டம் தான்
விநியோகஸ்தர்களுக்கு நிறைய பணம் கிடைத்தாலும் இது தனுஷுக்கு நஷ்டத்தை தந்தது. இதனாலே நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வரை தனுஷின் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.
இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையிலான சண்டை மூன்று வினாடி வீடியோவுக்காக மட்டுமல்ல. இது தனிப்பட்ட விரோதம் குறித்த சண்டை என்றும் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்