Cook with comali: இந்த சண்டையை ஆரம்பித்ததே இவர்தான்! உண்மையை போட்டு உடைத்த குரேஷி
Cook with comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும், தனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் எனவும் பதிவிட்டு சோசியல் மீடியாவில் மணிமேகலை பூகம்பத்தை கிளப்பிய நிலையில், இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் குரேஷி இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 5 தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் ஏற்பட்ட மோதல் பூதாகரமாகியது. இதனால் சோசியல் மீடியாவில் பல கருத்துகள் உலா வந்த நிலையில், பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் சண்டை ஏற்பட்ட நாளில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து குரேஷி அவரது குரேஷி வைப்ஸ் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா- மணிமேகலைக்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து தனிப்பட்ட கருத்துகள் இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக இருப்பதால் அங்கு என்ன நடந்தது என்பதை மக்களிடம் பகிர்வதாக கூறினார்.
பாசிட்டிவ்காக செய்தது இப்படி மாறிடிச்சு
சோசியல் மீடியாவில் இச்சம்பவம் குறித்து எல்லை மீறிய கருத்துகள் உலாவருகிறது. மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தபோது, அவருடைய விருப்பத்திற்கு மரியாதை அளித்து எதிர்கால பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு அவர் ரிப்ளை அளிக்கவில்லை. இதற்கிடையில் தன்னை பலரும் பிரியங்காவின் கூட்டாளி என திட்டி கமெண்ட் செய்தனர். நான் ஒரு விஷயத்தை பாசிட்டிவ்வாக மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் அதுவே நெகட்டிவ்வாக மாறியது.