தெனாலி என்ற டைட்டில் வைத்த ரஜினி.. அவர் நடிக்க நினைத்த மதனா கதை.. நடித்த முக்கிய நடிகர் - கே.எஸ். ரவிகுமார் பேட்டி!
தெனாலி என்ற டைட்டில் வைத்த ரஜினி குறித்தும் அவர் நடிக்க நினைத்த மதனா கதை குறித்தும், நடித்த முக்கிய நடிகர் குறித்தும் கே.எஸ். ரவிகுமார் பேட்டியளித்துள்ளார்.

தெனாலி என்ற டைட்டில் வைத்த ரஜினி.. அவர் நடிக்க நினைத்த மதனா கதை.. நடித்த முக்கிய நடிகர் - கே.எஸ். ரவிகுமார் பேட்டி!
தெனாலி என்ற டைட்டில் வைத்த ரஜினி குறித்தும்; நடிக்க நினைத்த மதனா கதை குறித்தும் கே.எஸ். ரவிகுமார் பேட்டியளித்துள்ளார்.
டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டியில், ‘’ரஜினி கூட படங்களில் பணியாற்றியது மட்டுமில்லாமல், எந்தக் கதையை விவாதித்தாலும் அந்தக் கதையின் விவாதத்தில் ரஜினி சார் பங்கெடுக்கிறார். அது பற்றி?
பதில்: ஹே ராம் படத்தை கமல் சாரே இயக்கி நடிக்கப்போறதாகச் சொன்னார். அப்போது தெனாலி படத்தை நீங்களே புரொடியூஸ் செய்யலாம் அப்படின்னு கமல் சார் சொன்னார். அப்ப ரெகுலராக ரஜினி சாரை மீட் பண்ணுவேன். இந்த விஷயத்தை ரஜினி சார்கிட்ட சொல்றேன். ஏற்கனவே படம் தயாரிச்சிருக்கீங்களான்னு கேட்கிறார். இல்லை சார்னு சொல்றேன். நீங்களே பண்ணீடுங்கன்னு ரஜினி சார் என்னிடம் சொல்கிறார்.