தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: கே.எஸ்.ரவிகுமார் போட்ட பாலம்.. சூப்பர் கேரக்டரை தர மறுத்த ரஜினி.. ஓடி வந்து சண்டையிட்ட மீனா!

Bayilvan Ranganathan: கே.எஸ்.ரவிகுமார் போட்ட பாலம்.. சூப்பர் கேரக்டரை தர மறுத்த ரஜினி.. ஓடி வந்து சண்டையிட்ட மீனா!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 17, 2024 06:00 AM IST

ரஜினிகாந்திடம் சென்ற நடிகை மீனா, நான் ஏன் அந்த வில்லி கதாபாத்திரத்தை செய்யக்கூடாது, அந்த வில்லி கதாபாத்திரத்தை செய்யக்கூடாது என்று நான் ரவிக்குமாரிடம் சொன்னீர்கள் என்று சண்டையிட்டார்.

ரஜினி - மீனா சண்டை!
ரஜினி - மீனா சண்டை!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “ரஜினி ஒரு மேடையில் பேசும் பொழுது, மீனா இன்றுவரை என் மீது கோபத்தில் இருக்கிறார் என்று பேசினார். அதற்கு காரணமாக அமைந்த சம்பவத்தை நான் இங்கு சொல்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே கே எஸ் ரவிக்குமாருக்கும் நடிகை மீனாவுக்கும் ஒரு நல்ல உறவு இருந்தது. 

ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் மீனா

இந்த நிலையில்தான், படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் மீனா நடிக்கிறேன் என்று அந்த படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் உரிமையோடு கேட்டார். ஆனால் அதற்கு ரஜினி அனுமதிக்கவில்லை. 

ரம்யா கிருஷ்ணன் தான் செய்ய வேண்டும் என்று ரஜினி மிகவும் உறுதியாக சொல்லிவிட்டார்

இதனையடுத்து கேஎஸ் ரவிக்குமார் நீ அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிரச்சினை இல்லை; ஆனால் ரஜினிக்கு அதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி விட்டார். அது மட்டுமில்லாமல் அந்த வில்லி கதாபாத்திரத்தை, ரம்யா கிருஷ்ணன் தான் செய்ய வேண்டும் என்று ரஜினி மிகவும் உறுதியாக சொல்லிவிட்டார் என்பதையும் மீனாவிடம் அவர் கூறி விட்டார். 

நான் ஏன் அந்த வில்லி கதாபாத்திரத்தை செய்யக்கூடாது - வெகுண்டெழுந்த மீனா 

இதனையடுத்து ரஜினிகாந்திடம் சென்ற நடிகை மீனா, நான் ஏன் அந்த வில்லி கதாபாத்திரத்தை செய்யக்கூடாது, அந்த வில்லி கதாபாத்திரத்தை செய்யக்கூடாது என்று நான் ரவிக்குமாரிடம் சொன்னீர்கள் என்று சண்டையிட்டார். 

உனக்கு குழந்தை முகம்.

அதற்கு ரஜினிகாந்த் உனக்கு குழந்தை முகம். முதலில் என்னுடைய ரசிகையாக நீ நடித்தாய்; அதன் பின்னர் என்னுடன் ஜோடியாக நடித்தாய். இதுவரை மீனாவின் முகம் என்றாலே குழந்தையின் முகம் தான் அனைவருக்கும் ஞாபகம் இருக்கிறது. 

உன்னுடைய சினிமா கேரியருக்கு பாதிப்பு ஏற்படும்.

இப்போது பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி வருகிறாய்; இந்த நேரத்தில் நீ வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால், உன்னுடைய சினிமா கேரியருக்கு பாதிப்பு ஏற்படும். புரியாமல் பேசுகிறாய் என்று ரஜினி கூறியிருக்கிறார்.  

மீனா ஏற்றுக் கொள்ளவில்லை - கோபமாக சென்று விட்டார்

அவ்வளவு சொல்லியும், அதை மீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியே பேசாமல் சென்று விட்டார். அதன் காரணமாக இன்று வரை மீனா ரஜினி மீது கோபமாகத்தான் இருக்கிறார்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்