Aarthi Ravi on jayam Ravi: ‘எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன் நீங்கதான்.. நானும் குழந்தைகளும் என்ன செய்வோம் ரவி' -ஆர்த்தி ரவி!-aarthi ravi post new explanation about his husband jayam ravi divorce announcement in her instagram page - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aarthi Ravi On Jayam Ravi: ‘எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன் நீங்கதான்.. நானும் குழந்தைகளும் என்ன செய்வோம் ரவி' -ஆர்த்தி ரவி!

Aarthi Ravi on jayam Ravi: ‘எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன் நீங்கதான்.. நானும் குழந்தைகளும் என்ன செய்வோம் ரவி' -ஆர்த்தி ரவி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 11, 2024 10:40 AM IST

Aarthi Ravi: என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். - ஆர்த்தி ரவி!

Aarthi Ravi on jayam Ravi: ‘எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன் நீங்கதான்.. நானும் குழந்தைகளும் என்ன செய்வோம் ரவி' -ஆர்த்தி ரவி!
Aarthi Ravi on jayam Ravi: ‘எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன் நீங்கதான்.. நானும் குழந்தைகளும் என்ன செய்வோம் ரவி' -ஆர்த்தி ரவி!

தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்கிறேன்.

இது குறித்து அவர் பதிவிட்டதாவது, “ சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து, நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்வரியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்று அவர் எடுத்த இந்த முடிவு, முழுக்க முழுக்க ரவியின் சொந்த விருப்பத்தைச் சார்ந்து, அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் எடுக்கப்பட்ட முடிவு அல்ல

ஆழ்ந்த மன வேதனை 

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை இப்போதும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும், என் நடத்தையின் மீது களம் கற்பிக்கும் வகையிலும், பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் நாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழநதைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால், இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய் கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடினமான காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை, எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருக்ககளுககு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீழ உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு ஆர்த்தி பதிவிட்டு இருக்கிறார். 

ஜெயம் ரவி முன்னதாக வெளியிட்ட அறிக்கை 

 

இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “வாழ்க்கை, என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள் பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமைக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம், எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதபோக்கு அளிக்க வேண்டும் என்பதே!

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி. நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என்று குறிப்பிட்டு இருந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜிவிபிரகாஷ்குமாரும், சைந்தவியும் விவாகரத்து செய்து கொண்ட நிலையில், ஜெயம் ரவியும் அவரது மனைவியும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று அவர்கள் தங்களது விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர். ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோர் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆர்வ் மற்றும் அயான் என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.