ஊரைக் கூட்டி உண்மையை சொன்ன கயல்.. ஷாக் ஆன பெரியப்பா.. நல்லபடியாக நடக்குமா திருமணம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஊரைக் கூட்டி உண்மையை சொன்ன கயல்.. ஷாக் ஆன பெரியப்பா.. நல்லபடியாக நடக்குமா திருமணம்?

ஊரைக் கூட்டி உண்மையை சொன்ன கயல்.. ஷாக் ஆன பெரியப்பா.. நல்லபடியாக நடக்குமா திருமணம்?

Malavica Natarajan HT Tamil
Oct 10, 2024 07:15 AM IST

கயலின் திருமணத்தை நிறுத்த அவரது பெரியப்பா துடித்து வருவதைக் கண்டு கயல் பொங்கி எழுவார் என நினைத்துக் கொண்டிருந்தால், சபையினர் முன் அவரிடம் மன்னிப்பு கேட்டு ட்விஸ்ட் வைத்துள்ளார் கயல்.

ஊரைக் கூட்டிய கயல்.. ஷாக் ஆன பெரியப்பா.. நல்லபடியாக நடக்குமா திருமணம்?
ஊரைக் கூட்டிய கயல்.. ஷாக் ஆன பெரியப்பா.. நல்லபடியாக நடக்குமா திருமணம்?

தன் பெரியப்பா செய்த அனைத்து தவறுகளையும் மறந்து, கயல்,சபையினர் முன் தன் பெரியப்பா பெரியம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க உள்ளார். இதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.

திருமணத்தை நிறுத்த எண்ணிய பெரியப்பா

கயலின் திருமணத்தை நிறுத்த கல்யாண விருந்தில் பூச்சி மருந்தை கலக்க நினைத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார் கயல் பெரியப்பா. தான் செய்தது தவறு என்பதை துளியும் உணராமல் தன் பக்கத்து நியாயத்தை மிகவும் ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.

கோபமடைந்த கயல்

இந்த நிலையில், அவர் கயலிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால், கயல், தனது பெரியப்பாவை தாக்கியதற்காக டேனியலை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார். பின், அவரிடம் மிகவும் கோவமாக பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நான் உங்களை கோபுரத்தில் உட்கார வைத்தாலும் சரிந்து கீழே வந்து குப்பை மேட்டில் தான் இருக்க நினைக்கிறீர்கள். நான் உங்களை நடத்தும் விதத்தில் எந்த குறையும் வைக்காத போது என்னிடம் என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்புகிறார்.

தன் ரணத்தை கொட்டித் தீர்த்த பெரியப்பா

இதுதான் சமயம் எனக் கூறி கயலின் பெரியம்மா, உண்மையை கயலிடம் கூறுமாறு வலியுறுத்துகிறார். அப்போது, தன் மனதில் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த வன்மத்தை கயலிடம் கொட்டித் தீர்த்தார்.

உன் மொத்த குடும்பமும் என்னை குலசாமியாக பார்க்கும் போது, நீ என்னை மதிக்காமல் சுற்றினார். நீ என்னை பொது சபையில் வைத்து அவமானப்படுத்தி வருவதை வழக்கமாக பயன்படுத்தி வந்ததால். பல நாள் தூக்கத்தை தொலைத்துள்ளேன்.

என்னை சுற்றி உள்ளவர்கள் நான் சொல்வதைக் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் போதையை கொடுத்து. ஆனால். நீ என்னை மட்டம் தட்டும்போதொல்லாம் என் கோவத்திற்கு ஆளாகி, மொத்த குடும்பத்தையும் அழிக்க நினைத்தேன்.

உங்கள் மொத்த குடும்பமும் என் காலில் செருப்பாக இருக்க வேண்டும். நான் உன்னால் அடிபட்ட பாம்பு. கொடிய பாம்பு. எப்படி பழிவாங்காமல் இருப்பேன், என் மகனை போலீசாக நினைத்தேன், என் பெண்ணை எழிலுக்கு கட்டி வைக்க நினைத்தேன்.

ஆனால், உன்னிடம் வாழ்க்கையின் பல இடங்களில் தோல்வியை மட்டும் தான் சந்தித்தேன். உன் குடும்பத்தை கீழே கொண்டுலர நினைத்தேன். ஆனால். அதை என்னை விட மேலே கொண்டுவர நினைத்ததால் தான், உன்மீது இத்தனை விஷத்தையும் கக்க நினைத்தேன்.

மன்னிப்பு கேட்க முடியுமா?

நான் சந்தோஷமாக இல்லாத போது உன் சந்தோஷத்தை நான் கொண்டாட விடுவேனா?. நான் என்றும் உனக்கு மேலாகத்தான் இருப்பேன். நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை எதிர்த்து எதுவும் பேசாமலும், செய்யாமலும் இருக்க வேண்டும் அது எல்லாம் உன்னால் முடியுமா? எனக் கேட்டு தனது ஆதங்கத்தையும் கோவத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார்.

இவை அத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கயல், தனது பெரியப்பாவின் கையை பிடித்து இழுத்து தரதரவென திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதனால், என்ன நடக்குமோ, தன்னைப் பற்றி திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் அவரின் பெரியப்பா, பெரியம்மா நடுங்கி நிற்கின்றனர்.

விளக்கமளிக்கும் கயல்

கயல் செய்த செயலைக் கண்டு மொத்த குடும்பமும் உறைந்து நின்ற நிலையில், அவரது பெரியப்பா, பெரியம்மாவை குறித்து பேசி புதிர் போட்டுள்ளார். ஆனால், தான் இவர்களிடம் நடந்துகொண்ட விதம் தவறு. இவர்கள் என் குடும்பத்தை மட்டம் தட்டிவிடுவார்கள் என நினைத்து மிக மோசமாக நடந்துள்ளேன். என் அம்மாவை சுலபமாக ஏமாற்றி விடலாம். அது எனக்கு மிகவும் பயத்தை கொடுத்தது. என் குடும்பத்தை யாரும் ஏமாற்றக்கூடாது என நினைத்து மிக திமிராக அனைவரிடமும் நடந்து கொண்டனர்.

இதை புரியாமல் என் வீட்டில் உள்ளவர் என்னை ஹிட்லர், சண்டைக்காரி என பேசினர். சிறு வயதிலிருந்தே என் குடும்பத்தை அழிக்க வந்தவர்கள் தான் என் பெரியப்பா பெரியம்மா என நினைத்தேன். அதற்கு காரணமும் அவர்கள் தான் எனக் கூறி மண்டபத்தில் உள்ள அனைவருக்கும் ஷாக் கொடுத்திருப்பார்,

இதனால், கயல் அவர்கள் இதுவரை செய்த அனைத்து விஷயங்களையும் குடும்பத்தினரிடம் போட்டுக் கொடுத்துவிடுவாரோ என நினைத்து அவரின் பெரியப்பாவும் பெரியம்மாவும் பயந்து நடுங்கினர். அத்துடன் ஊரார் முன் தன் மானம் மொத்தமும் போகப்போவதாக எண்ணினர்.

 

மன்னிப்பு கோரும் கயல்..

ஆனால், இன்றைய சீரியல் ப்ரோமோவில் யலின் பேச்சைக் கேட்டு அவரது பெரியம்மா பெரியப்பா உறைந்து நிற்பது போன்றும், சபையில் தன் பெயரை கெடுக்க எதுவும் செய்யக்கூடாது என்றும் நினைத்து அமைதியாக நின்றனர். பின் கயல் அவரது பெரியப்பாவிடம் மன்னிப்பு கேட்பது போல் அமைந்துள்ளது. தான் அவரை புரிந்து கொள்ளாமல் நடந்து வந்துள்ளேன். இந்த சபையில் வைத்து இவர்களினி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகிறேன் என கயல் கூறினார்.

கயல் பொது இடத்தில் இதுவரை தன்னை மரியாதையாக நடத்தாத நிலையில், இப்படி கௌரவமாக பேசியதால், இருவரும் செய்வதறியாது நிற்கின்றனர். அத்துடன், கயலின் பேச்சைக் கேட்டு அவரது பெரியப்பா அழுதுவிடுவாரோ எனவும் அவரது பெரியம்மா யோசித்து வருகிறார்.

ஆனால், கயல் சபையினர் முன் தன் பெரியப்பாவிடமும் பெரியம்மாவிடமும் காலில் விழுந்து இவர் உண்மையில் மன்னிப்பு கேட்கப் போகிறாரா? இல்லை எழிலின் அம்மாவிடம் சவால் விட்டபடி இவர்களிடமும் சவால் விடப்போகிறாரா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.