Kayal Serial: தனி ரூமில் ரொமான்ஸ்.. கர்சீப்பில் இருந்த மயக்க மருந்து.. அலேக்காக தூக்கிய கும்பல்! - கயல் சீரியலில் இன்று!-kayal serial today episode promo on september 30 2024 indicates kayal was kidnapped by the group sent by gautam - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: தனி ரூமில் ரொமான்ஸ்.. கர்சீப்பில் இருந்த மயக்க மருந்து.. அலேக்காக தூக்கிய கும்பல்! - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: தனி ரூமில் ரொமான்ஸ்.. கர்சீப்பில் இருந்த மயக்க மருந்து.. அலேக்காக தூக்கிய கும்பல்! - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 30, 2024 09:29 AM IST

Kayal Serial: கயலும் எழிலும் ரூமில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதை, சிவசங்கரி பார்த்து கடுப்பாகிறாள். அவளே தீபிகாவை கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேவும் அனுப்புகிறாள். இதையடுத்து கயலும், சிவசங்கரியும் சந்திக்க நேரிடுகிறது. - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: தனி ரூமில் ரொமான்ஸ்.. கர்சீப்பில் இருந்த மயக்க மருந்து.. அலேக்காக தூக்கிய கும்பல்! - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: தனி ரூமில் ரொமான்ஸ்.. கர்சீப்பில் இருந்த மயக்க மருந்து.. அலேக்காக தூக்கிய கும்பல்! - கயல் சீரியலில் இன்று!

அப்போது கயல், இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்த தீபிகாவிற்கு வந்த நிலைமைதான் உங்களுக்கும் வரும் அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று மிரட்டுகிறாள். இதற்கிடையே, எழிலை கொல்ல வந்த கொலையாளிகள் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக, அங்கு இருந்த கயலை கடத்திச் செல்கிறார்கள். அடுத்தது என்ன நடந்தது உள்ளிட்ட விபரங்கள் இன்றைய எபிசோடில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

நேற்றைய எபிசோடில், கயல் மற்றும் எழிலின் ரிஷப்ஷன் நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடையில் பேசிய கயலின் அண்ணனான மூர்த்தி, மிக சீக்கிரமாகவே அப்பா இறந்து போனதை தாங்க முடியாமல், குடித்துவிட்டு பொறுப்பற்ற முறையில் நான் இருந்தேன். அதில் ஏற்பட்ட விரக்தியால், குடும்பத்தினரிடம் கோபமாக நடந்து கொண்டேன். கயலிடம் தகாத வார்த்தைகளை பேசினேன். சில நேரங்களில் அவளை அடித்தும் இருக்கிறேன்.

அதற்காக தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றான். தொடர்ந்து பேசிய அவன், எனக்கு சரியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக அவள் கடுமையாக உழைத்தாள். எனக்கு ஒரு கேண்டின் வைத்துக் கொடுத்து, அதற்கான வழிமுறைகளையும் அவளே வடிவமைத்துக்கொடுத்தாள். இதைக் கேட்ட கயலும் நெகிழ்ந்தாள்.

கண்ணீரில் கயல்

அடுத்ததாக வந்த கயலின் தங்கை, கல்யாணத்திற்கு முன்னே நான் கர்ப்பமானேன். அதன் வழியாக தற்கொலை செய்ய முயன்ற எண்னை, சரியாக வழிபடுத்தி, எனக்கு நான் பிடித்தவரோடு வாழ்க்கை அமைவதற்கு, கயல் அக்கா பெரும் முயற்சி எடுத்தாள். அதற்காக அவளுக்கு நன்றி என்றாள்.

அடுத்ததாக வந்த கயலின் தம்பி, நான் சிறுவயதில் போலீசாக ஆக வேண்டும் என்ற ஆசை பட்டதை மனதில் வைத்துக்கொண்டு, அந்த ஆசையை நான் அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக கயல் ராப்பகலாக உழைத்தாள். அவளை நான் என்னுடைய அப்பாவாக நினைத்து கட்டி பிடிக்க வேண்டும் என்றும் கூற, இருவரும் கட்டிப் பிடித்தனர். தொடர்ந்து கயலுக்கு தன்னுடைய அப்பா குடும்பத்தோடு இருப்பது போன்ற போட்டோவை அவன் பரிசாக கொடுத்தான். அதைப் பார்த்த அனைவரும் கண்ணீரில் நனைந்தனர் இதையடுத்து வந்த கடைக்குட்டி தங்கை, கயல் அக்காவிற்கு மோதிரத்தை கிப்டாக கொடுத்தாள்.

இதை பார்த்த வடிவும், தர்மலிங்கமும் கடுப்பாகி உட்கார்ந்திருந்தனர். இதற்கிடையே, எழிலை தூக்க வேண்டும் என்று கௌதம் அனுப்பி இருந்த ஆட்கள், எழில் தனியாக வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, கெளதம் போன் செய்து வேலை முடிந்ததா என்று அவர்களிடம் கேட்க, எல்லோரும் குடும்பத்தோடு பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முடித்துவிட்டு கூப்பிடுகிறேன் என்று கூறினான். அத்தோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.