கயலிடம் வசமாக சிக்கும் பெரியப்பா.. உண்மையை போட்டு உடைத்த டேனியல்.. என்ன செய்ய போகிறார் கயல்..
கயல் சந்தோஷமாக இருப்பதை பொறுக்க முடியாத அவரது பெரியப்பா, திருமணத்தை நிறுத்த செய்த ஏற்பாடுகள் அனைத்தும் கயலுக்கு தெரிய வருகிறது.
கயலின் திருமணத்தை நிறுத்த பல முயற்சிகளை கையாண்டு வந்த அவரின் பெரியப்பா தற்போது அடுத்த கட்டமாக திருமண விருந்தில், பூச்சி மருந்தை கலக்க நினைக்கிறார். இதனை டேனியல் பார்த்ததால் இருவருக்கும் பிரச்சனை நடக்கிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த கயல், டேனியலை அவரது பெரியப்பாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
இதையடுத்து, நான் சந்தோஷமாக இல்லாத போது நீயும் சந்தோஷமாக இருக்கக் கூடாது என தான் இப்படி செய்ததற்கான காரணத்தை கோவமாக கூறுகிறார் கயலின் பெரியப்பா,
இதனால், திருமணத்தை சுமூகமாக எப்படி கொண்டு செல்வது எனத் தெரியாமல் உள்ளார் கயல்.
திருமணத்தை தடுக்க முயற்சி
கயல் திருமணத்தை நிறுத்த எழிலின் தாய், அவரது சித்தி, கயலின் பெரியப்பா, பெரியம்மா தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், கயலிடம் எழிலின் அம்மா முதலில் சிக்கினார்.
அப்போது, தன்னை ஆள் வைத்து கடத்தியது நீங்கள் தான் என்பது எனக்கு தெரியும் என்றும், நான் உங்கள் பணத்திற்காக எழிலை திருமணம் செய்யவில்லை என்றும் கூறினார். பின், கயல் உங்களிடமிருந்து நான் எழிலை பிரிக்க மாட்டேன். அதுமட்டுமின்றி, இந்த திருமணத்தை நிறுத்த நீங்கள் செய்த எதையுமே நான் எழிலிடம் கூற மாட்டேன் என பாசமாக பேசினார். பின் நீங்கள் எங்க அம்மாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறீர்கள் என பாசமாக நடித்தார்.
எழிலின் அம்மாவை மிரட்டிய கயல்
கயலின் வார்த்தைகளை உண்மை என நம்பி இருந்த வேளையில், வில்லத்தனமாக சிரித்து தான் சொல்லியது அத்தனையும் பொய். எங்கு இந்த திருமணம் பிரச்சனை இல்லாமல் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தான் நீங்கலள் நல்லவர் போல் நடிக்கிறீர்கள், உங்கள் நடிப்பை நான் நம்ப மாட்டேன் என கயல் கூறினார்,
அதுமட்டுமின்றி, எழிலுக்கும் எனக்கும் நடக்கும் திருமணம் கடவுளால் ஏற்பாடு செய்யப்பட்டது, அதை மாற்றும் சக்தி உங்களுக்கு இல்லை. நீங்கள் செய்த அனைத்தையும் எழிலிடம் சொல்வேன் என மிரட்டவும் செய்துள்ளார்.
திருமணத்தை நிறுத்த திட்டமிடும் பெரியப்பா
அந்த சமயதில், கயலின் கல்யாண உணவில் வாந்தி, பேதி மருந்தை கலந்து திருமணத்தை நிறுத்த அவரது பெரியப்பாவும் பெரியம்மாவும் திட்டமிடுகின்றனர். அதனை டேனியல் கேட்டுவிடுகிறார்.
இதனால், கயலின் பெரியப்பாவிற்கும் டேனியலுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையை யாரும் பார்க்கக் கூடாது என கயலின் பெரியம்மா தந்திரங்களை செய்து வந்தார்.
இதனை அந்த வழியாக வந்த கயல் பார்த்துவிடுகிறார். தான் தெரியால் செய்ததாகவும் இனி இப்படி செய்ய மாட்டேன் எனவும் கூறி மன்னிப்பும் கேட்கிறார் ஆனால், அதனை நம்பாத டேனியல், கயலின் பெரியப்பாவை அடித்து தாக்கினார்.
நடந்த அனைத்தயும் பார்த்துக் கொண்டிருந்த கயல், டேனியலைத் தடுக்கிறார். அந்த சமயத்தில் டேனியல் திருமணத்தை நிறுத்த அவர் சாப்பாட்டில் பூச்சி மருந்து கலக்க நினைத்தார் என உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.
இதனால், கயல் அவரது பெரியப்பாவின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், கயல் நாடகத்தின் இன்றைய ப்ரமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
கயலிடம் சிக்கிய பெரியப்பா
அதில், கயலின் பெரியப்பா செய்த தவறுகளையும் அதை மறைக்க டேனியலுக்கு பணம் கொடுக்க முயன்றதையும் டேனியல் கயலிடம் கூறினார். அனைத்தையும் கேட்ட டேனியல், என்ன இருந்தாலும் எனது பெரியப்பாவை அடித்தது தவறு. அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினார்.
அதன்பின், நான் சந்தோஷமாக இல்லாதபோது நீ மட்டும் சந்தோஷமாக இருக்க முடியுமா? அதனால் தான் நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முயன்றேன் எனக் கூறி தனது மொத்த கோவத்தையும் கயலிடம் வெளிப்படுத்தி இருப்பார்.
இதையடுத்து எழிலுடன் தனக்கு நடக்கும் கல்யாணத்தை கயல் எப்படி பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்கிறார். எழிலின் தாய், தனது பெரியப்பா, பெரியம்மாவை சமாளித்து இந்த திருமணத்தை நடத்திக் காட்டுவாரா என்பதை காண மக்கள் காத்திருக்கின்றனர்.