Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா.. காதலால் துடிக்கும் கார்த்திக்-கார்த்திகை தீபம் அப்டேட்!-karthigai deepam serial update about deepa who is suffering from fever and karthi who is throbbing with love - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா.. காதலால் துடிக்கும் கார்த்திக்-கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா.. காதலால் துடிக்கும் கார்த்திக்-கார்த்திகை தீபம் அப்டேட்!

Marimuthu M HT Tamil
Sep 25, 2024 03:47 PM IST

Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா குறித்தும், காதலால் துடிக்கும் கார்த்திக் பற்றியும் கார்த்திகை தீபம் அப்டேட் குறித்தும் பார்ப்போம்.

Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா.. காதலால் துடிக்கும் கார்த்திக்-கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா.. காதலால் துடிக்கும் கார்த்திக்-கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்று நடக்கப்போவது என்ன?

அதாவது, ஆசிரமத்தில் இருக்கும் நர்ஸ் தீபாவுக்கு தனக்கு தெரிந்த வைத்தியத்தைப் பார்க்க, இங்கே தூக்கத்தில் இருந்த கார்த்திக் திடீரென எழுந்து தீபாவுக்கு ஏதோ ஆபத்து என்பது போல் தோன்றுவதாக ஃபீல் செய்ய, கீதா தீபாவுக்கு எதுவும் ஆகாது என்று கூல் செய்கிறாள்.

மறுபக்கம் தீபாவுக்கு காய்ச்சல் குறையாத நிலையில் என்னென்னமோ செய்து பார்க்கின்றனர். ஆனாலும் காய்ச்சல் குறையாத காரணத்தால் ஷக்திக்குத் தகவல் கொடுக்க, அவளும் ட்ரீட்மெண்ட் கொடுக்க, அப்போதும் குணமாகாத காரணத்தால் ஒரு டாக்டருக்கு போன் செய்கிறார்கள்.

டாக்டரிடம் தனது உறவுக்காரப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி என்ன ட்ரீட்மென்ட் கொடுப்பது என்று விசாரிக்க, அவர் சில வழிமுறைகளை சொல்ல அதையும் பின்பற்றி பார்க்க, அப்போதும் எந்த பயனும் இல்லை, உடல்நிலை தீபாவுக்கு சரியாகாமல் தான் இருக்கிறது என்று தெரிய வருகிறது.

இதனால் டாக்டர் அந்தப் பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வரச்சொல்ல ஷக்தி, துங்காவுக்கு பயந்து தயங்கினாலும் வேறு வழியில்லை என்பதால் தீபாவை ஹாஸ்பிடல் அழைத்துச்செல்ல முடிவெடுக்கிறாள்.

அடுத்த நாள் காலையில் கார்த்திக்கு தீபாவுக்கு கண் எதிரே கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று திட்டமிடும் அபிராமி, விஷயத்தை சொல்லாமல் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து வருகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், நர்ஸ் ஷக்தி, ரவுடிகளிடம் இருந்து தீபாவை காப்பாற்றுவதற்காக, அவளை அழைத்து கொண்டு, ஒரு ஹோமுக்கு வருகிறாள். தீபா ஏற்கனவே அந்த ஆசிரமத்தில் பாடி இருக்கிறாள் என்பதால், அவளை பார்த்ததும் தீபாவுக்கு என்னாச்சு என்று அங்கிருந்தவர்கள் விசாரிக்க, நர்ஸ் ஷக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி, தீபாவை அங்கே ஒப்படைத்து விட்டு வருகிறாள்.

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, ஆனந்த் வீட்டில் இருப்பது கீதாவா என்று கேட்க, கார்த்திக் ஷாக் ஆகிறான், மேலும் நான் துங்காவிடம் பேசவா என்று கேட்க, வேண்டாம் என்று சொல்கிறான். மேலும் துங்கா பெரிய ஆளு, பணபலம் கொண்டவன்; அதான் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வேணாம் என்று சொல்றேன் என்கிறான்.

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா வீட்டிற்கு வர, கார்த்திக் அவளைத் தடுத்து நிறுத்தி, ’எங்க அண்ணி போயிட்டு வர்றீங்க’ என்று கேள்வி கேட்க, ஃப்ரெண்ட் வீட்டிற்கு சென்று வருவதாக சமாளிக்கிறாள். அத்துடன், கார்த்திக்கு சந்தேகம் வந்துடுச்சு என்பதையும் உறுதிபடுத்திக்கொண்டாள்.

ஆசிரமத்தில் தீபா படுத்திருக்க மதர்ஸ் மற்றும் பார்வையற்ற குழந்தைகள், அவளை சுற்றி உட்கார்ந்து கொண்டு அவளுக்காக பிராத்தனை செய்ய, திடீரென தீபாவுக்கு அளவுக்கு அதிகமாக காய்ச்சல் உண்டாகிறது. இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.