Karthigai deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today episode on september 23 2024 indicates sakthi save the deepa - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 24, 2024 11:23 AM IST

Karthigai deepam: தீபா ஏற்கனவே அந்த ஆசிரமத்தில் பாடி இருக்கிறாள் என்பதால், அவளை பார்த்ததும் தீபாவுக்கு என்னாச்சு என்று அங்கிருந்தவர்கள் விசாரிக்க, நர்ஸ் ஷக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி, தீபாவை அங்கே ஒப்படைத்து விட்டு வருகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா விஷயத்தில், ஐஸ்வர்யாவுக்கு தொடர்பு இருப்பது கார்த்திக்கு தெரிய வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இன்று நடக்கப்போவது என்ன?

அதாவது, நர்ஸ் ஷக்தி, ரவுடிகளிடம் இருந்து தீபாவை காப்பாற்றுவதற்காக, அவளை அழைத்து கொண்டு, ஒரு ஹோமுக்கு வருகிறாள். தீபா ஏற்கனவே அந்த ஆசிரமத்தில் பாடி இருக்கிறாள் என்பதால், அவளை பார்த்ததும் தீபாவுக்கு என்னாச்சு என்று அங்கிருந்தவர்கள் விசாரிக்க, நர்ஸ் ஷக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி, தீபாவை அங்கே ஒப்படைத்து விட்டு வருகிறாள்.

 

கீதா
கீதா

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, ஆனந்த் வீட்டில் இருப்பது கீதாவா என்று கேட்க, கார்த்திக் ஷாக் ஆகிறான், மேலும் நான் துங்காவிடம் பேசவா என்று கேட்க, வேண்டாம் என்று சொல்கிறான். மேலும் துங்கா பெரிய ஆளு, பணபலம் கொண்டவன்; அதான் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வேணாம் என்று சொல்றேன் என்கிறான்.

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா வீட்டிற்கு வர, கார்த்திக் அவளை தடுத்து நிறுத்தி, எங்க அண்ணி போயிட்டு வரீங்க என்று கேள்வி கேட்க, ஃப்ரண்ட் வீட்டிற்கு சென்று வருவதாக சமாளிக்கிறாள். அத்துடன், கார்த்திக்கு சந்தேகம் வந்துடுச்சு என்பதையும் உறுதிபடுத்திக்கொண்டாள்

கார்த்திக்
கார்த்திக்

ஆசிரமத்தில் தீபா படுத்திருக்க மதர்ஸ் மற்றும் பார்வையற்ற குழந்தைகள், அவளை சுற்றி உட்கார்ந்து கொண்டு அவளுக்காக பிராத்தனை செய்ய, திடீரென தீபாவுக்கு அளவுக்கு அதிகமாக காய்ச்சல் உண்டாகிறது. இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

சக்தி, கார்த்தியிடம் தீபா இருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய, இந்த விஷயம் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்தது. அதன் பிறகு ஐஸ்வர்யா, தீபா தான் கீதா என சொல்ல வைத்து விட்டால், தீபா துங்காவிடம் மாட்டிக் கொள்வாள். அதன் பின்னர் அவள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருவது கஷ்டம். அதனை வைத்து தான் தப்பித்து விடலாம் என திட்டமிட்டாள். அந்த திட்டத்தின் படி அவள் சக்தியை பார்க்க கிளம்பி வந்தாள்.

துங்காவும், அதே இடத்திற்கு கிளம்பி வர, இன்னொரு பக்கம் கார்த்திக் இன்ஸ்பெக்டருடன் கிளம்பி வந்தான். மெடிக்கல் ஷாப்பில் சக்தி குறித்த விவரங்களை கேட்டு அறியும் இவர்கள் சக்தி வீட்டிற்கு வந்தனர்.

பிறகு ஆளாளுக்கு ஒரு பக்கம் சக்தி வீட்டை நெருங்க, அங்கு வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து குழப்பம் அடைந்தனர். போலீஸ் துங்காவை விசாரிக்க, சும்மா இந்த பக்கமாக வந்ததாக சொல்லி சமாளித்து அங்கிருந்து கிளம்பினான். அதே நேரத்தில் ஐஸ்வர்யா காரில் ஏறி செல்வதை கார்த்திக் பார்த்துவிட, தீபாவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது ஐஸ்வர்யா தான் என்பதை தெரிந்து கொண்டான்.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.