தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Serial Today Episode

Karthigai Deepam:தாலி கட்ட சம்மதித்த கார்த்தி;நட்சத்திராவுக்கு அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Feb 15, 2023 12:56 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

தாலி கட்ட சம்மதிக்க கார்த்தி;
தாலி கட்ட சம்மதிக்க கார்த்தி;

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அபிராமி வீட்டுக்கு வந்த மகானிடம் அனைவரும் ஆசீர்வாதம் வாங்க அதன் பிறகு அவர் ஒவ்வொரு அறையாகச் சென்று தீர்த்தம் தெளிக்கும்போது கார்த்தியின் அறைக்குள் ஒரு பெண் இருப்பதை தனது தெய்வ சக்தி மூலம் தெரிந்து கொள்கிறார். இருப்பினும் அவர் தீர்த்தம் தெளிக்க அது தீபாவின் மேல் விழுகிறது.

அடுத்து அபிராமி கார்த்தியின் கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த தாலியை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி நீங்கள் கண்டிப்பாக கல்யாணத்திற்கு வர வேண்டும் என சொல்ல மகான் கல்யாணத்திற்கு வர முடியாது என சொல்வதால் அபிராமி இப்போதே கார்த்தியிடம் தாலியை நட்சத்திராவின் கழுத்தில் கட்ட சொல்கிறாள். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைய கார்த்தி அம்மாவின் ஆசைக்காக சம்மதம் தெரிவிக்கிறான்.

உடனடியாக கார்த்தி மேலே சென்று தீபாவிடம் இந்த விஷயத்தை சொல்ல அவள் வருத்தப்படுகிறாள். அதன் பிறகு நட்சத்திராவுக்கு இந்த விஷயத்தை சொல்ல அவள் சந்தோஷமாக துள்ளி குதித்துக் கொண்டு கீழே ஓடி வர அங்கு சிவா உக்காந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்