Karthigai Deepam: அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி-karthigai deepam serial today august 14 2024 episode - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி

Karthigai Deepam: அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி

Aarthi Balaji HT Tamil
Aug 14, 2024 12:17 PM IST

Karthigai Deepam: அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி - கார்த்திகை தீபம்!
அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி - கார்த்திகை தீபம்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரமேஷ் கார்த்திக் கொண்டு வந்த ஆள் தான் என்ற ரகசியம் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ரம்யா அதிர்ச்சி

அதாவது, ஐஸ்வர்யா ரம்யாவை சந்தித்து ரமேஷ் குறித்த உண்மையை உடைக்க அதை கேட்டதும் ரம்யா அதிர்ச்சி அடைகிறாள், இதுக்கெல்லாம் நீங்க தான் காரணமா அப்பா என்று கோபம் கொள்கிறாள்.

அதனை தொடர்ந்து நேராக வீட்டிற்கு வந்த ரம்யா தனது அப்பாவுக்கு ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்து என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே பா.. நான் கார்த்தியை அடையாமல் விட மாட்டேன், அதற்கு யார் தடையா இருந்தாலும் சும்மா விட மாட்டேன் என்று வன்மத்தை கொட்டுகிறாள். ஜூஸை குடித்த அவளது அப்பா சரிந்து விழுகிறார்.

தீபாவை சும்மா விட மாட்டேன்

இதன் தொடர்ச்சியாக இன்னொரு பக்கம் புதிய ஐஸ்வர்யா காட்டப்படுகிறார். இதை தொடர்ந்து ரூபாஸ்ரீ வீடு காட்டப்படுகிறது. இந்த வீட்டில் கோகிலா ரூமுக்குள் அடைந்து கொண்டிருக்கும் ரூபஸ்ரீயை வெளியே கூப்பிடுகிறாள். வெளியே வந்த அவள் இந்த தீபாவால் எல்லாரும் என்னை டூப்ளிகேட் ரூபாஸ்ரீனு கூப்பிடுறாங்க, என் மரியாதையே போய்டுச்சு.. அந்த தீபாவை சும்மா விட மாட்டேன் என்று ஆவேசப்படுகிறாள்.

தீபாவுக்கு எதிராக சதி

இந்த நேரத்தில் அங்கு என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தீபாவுக்கு கல்யாணம் என்று சொல்ல கோகிலாவும் ரூபாஸ்ரீயும் குழப்பம் அடைய தீபா தாலியை கழட்டியதையும் அபிராமி மீண்டும் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தையும் சொல்லி தீபாவுக்கு எதிராக சதி செய்ய ரூபஸ்ரீயையும் தன்னுடன் கூட்டு சேர்க்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

தீபாவிடமிருந்து புடவையை கொள்ளையடித்து வந்தவன் ரம்யாவிடம் கொண்டு வந்து கொடுக்க, அவள் சந்தோஷப்படுகிறாள்.அதே நேரத்தில், தீபா பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க, அங்கு வந்த கார்த்திக் என்ன ஆச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறாள். கார்த்திக் சரி விடுங்க உங்களுக்குதான் பச்ச கலர் பிடிக்காது என்று சொல்ல, தீபா அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, கார்த்திக் தெரியும் என்றான்.

நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கும் போது நீங்க போன் பண்ணுனேன். சும்மா உங்களோடு அப்படி விளையாடினேன் என்று சொல்கிறான். மேலும் ஒரு கவரை கொடுத்து பிரிச்சு பாருங்க என்று சொல்ல, அதில் தீபாவுக்கு பிடித்த ப்ளூ கலரில் புடவை இருக்கிறது. அதை பார்த்து தீபா சந்தோஷப்பட்டாள். தொடர்ந்து தான் சவாலில் ஜெயித்து விட்டதாக எல்லோரிடமும் சொல்கிறாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.