Singappenne: புலம்பிய தந்தை.. கண்ணீர் மல்க நின்ற மகன்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ இன்று-singappenne serial episode promo today on august 14 2024 indicates drama - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: புலம்பிய தந்தை.. கண்ணீர் மல்க நின்ற மகன்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ இன்று

Singappenne: புலம்பிய தந்தை.. கண்ணீர் மல்க நின்ற மகன்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ இன்று

Aarthi Balaji HT Tamil
Aug 14, 2024 09:26 AM IST

Singappenne: அழகப்பன், “ இந்த உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பெற்றவர்களை, பிள்ளைகள் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது தான். அது யாருக்குமே நடக்க கூடாது ” என அழுகிறார்.

புலம்பிய தந்தை.. கண்ணீர் மல்க நின்ற மகன்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ இன்று
புலம்பிய தந்தை.. கண்ணீர் மல்க நின்ற மகன்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ இன்று

இன்றைய எபிசோட்

அதில், “ ஊருக்கு சென்று இருக்கும் அனைவரும் வெளியே அமர்ந்து, பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அழகப்பன், “ இந்த உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பெற்றவர்களை, பிள்ளைகள் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது தான். அது யாருக்குமே நடக்க கூடாது ” என அழுகிறார்.

உடனே, “ நாங்கள் இருக்கும் வரை நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் “ என சொல்கிறார் ஆனந்தி. அதை அவரின் மகன் கண்ணீர் மல்க ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருக்கிறார்.

அன்பு, “ இங்க வந்த பிறகு ஆனந்தியும், நீங்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என தெரிந்து கொண்டோம். இது எல்லாமே எங்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கும் “ என்றார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்

சாமியின் நகைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஆனந்தியின் தந்தை அழகப்பனிடம் கோயில் நிர்வாகத்தினர் வீடு தேடி வந்து கொடுக்கிறார்கள். பூஜை செய்த சாவியை, கோயில் பூசாரியிடம் அவர் அதை வாங்க மறுக்கிறார். இருப்பினும் அனைவரும் அவரை வாங்க சொல்லியதால் தயக்கத்துடன் அதை வாங்கி கொள்கிறார். ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய வேலையே இருக்கிறது.

அழகப்பனிடம் பொறுப்பு

கோலாகலமாக இந்த ஊருக்குள் வந்த ஆனந்தியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று சதி திட்டம் வேலையில் இறங்கினார். சுயம்புலிங்கம். சாமியின் நகைகளை பாதுகாக்கும் பொறுப்பை வேண்டும் என்றே அழகப்பனிடம் கொடுக்க வைத்தது. ஒரு கும்பலை வேண்டும் என்றே, ஏற்பாடு செய்து வைத்து இருக்கிறார். அவர்களிடம் கோயில் நகைகளை எடுத்து வைத்து கொண்டு சில நாள்களுக்கு பிறகு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அவர்களும் சரி என சொல்லிவிட்டார்கள்.

மயக்கம் போட்ட ஆனந்தி

அனைவரும் திருட்டு தனமாக இளநீர் குடிக்க தோட்டத்தை சேர்ந்தவர் விரட்டினார். ஆனந்தி உட்பட அங்கிருந்து அனைவரும் ஓடி வர, ஆனந்தி மயக்கம் போட்டு அப்படியே சாய்வது போல் இருந்தார். 

இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரியவரும் என நினைத்தால் அவர் மறுத்துவிட்டார். வழக்கம் போல் இங்கு மருத்துவர் இருக்க மாட்டார், சென்னை வந்து பார்த்து கொள்கிறேன் என மழுப்பிவிட்டார். 

இதை பார்த்த ரசிகர்கள், எப்போது தான் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவர போகிறதோ என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.