Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் - செய்யாறு பாலு பேட்டி-karthi grudge against vijay and advance booking itself the goat is happening in crores says journalist cheyyaru balu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் - செய்யாறு பாலு பேட்டி

Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் - செய்யாறு பாலு பேட்டி

Marimuthu M HT Tamil
Sep 03, 2024 02:45 PM IST

Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் படம் பற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பிரத்யேகத்தகவல்களை வழங்கியுள்ளார்.

Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் - செய்யாறு பாலு பேட்டி
Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் - செய்யாறு பாலு பேட்டி

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தனது சொந்த சேனலில் அளித்த பேட்டியில், ’’தி கோட் திரைப்படத்துக்கு கிட்டத்தட்ட உலகம் முழுக்க ஆறாயிரம் திரையரங்குகள் அப்படின்னு அர்ச்சனா கல்பாத்தியே சொல்லிட்டாங்க. அட்வான்ஸ் புக்கிங், உலகம் முழுக்க ரூ.15 கோடிக்கு டிக்கெட் விற்பனையாகியிருக்கு. கேரளா, கர்நாடகாவில் 4 மணி அதிகாலைக்காட்சிக்கான டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டது. இதையெல்லாம்தாண்டி, பிரேம்ஜி கொடுத்த பேட்டிகளில், நீங்கள் எது எல்லாம் பிரச்னை அப்படின்னு நினைக்கிறீங்களோ அது எல்லாம் படத்தில் பாஸிட்டிவ் ஆக இருக்கும்ன்னு சொல்றார். பாடல்கள் சரியாக இல்லைன்னு சொல்லிட்ட இருந்த சூழலில், விசில் போடு பாடல் படத்தில் வேறு மாதிரி இருக்கும்ன்னு சொல்றார். யுவன் சரியாக மியூசிக் பண்ணலை அப்படின்னு விமர்சனங்கள் வந்தது. இன்ஸ்டாகிராமை கூட மியூட் செய்து வைச்சிட்டார், அந்த அளவுக்கு யுவன் சங்கருக்கு அழுத்தம் இருந்தது.

வட இந்தியாவில் அதிகம் விளம்பரப்படுத்தப்படும் தி கோட்:

இந்தப் படம் வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்தி உரிமையை ஜீ சினிமாஸ் வாங்கியிருக்காங்க. பெருநகரங்களில் மெட்ரோவில் எல்லாம் விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி எல்லாம் செய்தால் தான், அவர்கள் நினைக்கும் ஆயிரம் கோடி ரூபாய் வந்து சேரும். தென்னிந்திய மாநிலங்கள் எல்லாம் தாண்டி, விஜய்க்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தி கோட் படத்தின் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

படம் ஆரம்பித்து ஒரு 16ஆவது நிமிடத்தில் இருந்து ரசிகர்கள் படத்தில் ஒன்றியிருவாங்க அப்படின்னு பிரேம்ஜி சொல்லியிருக்கார். இப்படத்தில் ஐபிஎல் மேட்ச் ஒருபுறமும், அதற்கு இணையாக இன்னொரு கதையும் போய்க்கொண்டு இருக்கும். அதனால் தான், இப்படத்தில் எஸ்.கே இருக்கிறாரா, எம்.எஸ்.தோனி இருக்கிறாரா என ஒரு கேள்வி வந்திட்டே இருக்குது. மேலும், விஜயகாந்த் வரும்காட்சிகளைப் பார்க்க தேமுதிக தொண்டர்கள் ஆவலுடன் உள்ளனர். விஜயகாந்த் குடும்பமும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

விஜயகாந்த் காட்சிகளுக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மேலும் வெங்கட் பிரபு, விஜயகாந்த் நடித்த காட்சிகளை ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் எடுத்துட்டு வந்து, அவர் உயிருடன் இருக்கும்போது காட்டவே ஆசைப்பட்டிருக்கிறார். இதனிடையே அவர் இறந்தது வெங்கட் பிரபுக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் தான். விஜய்யும் அண்ணன்மாதிரி அப்படின்னு சொல்லியிருக்கார்.

தமிழ்நாட்டில் காலை 4 மணிக்காட்சி இல்லை அப்படின்னு தெரிஞ்சவுடனே, விஜய் ரசிகர்கள் அண்டைமாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில்போய், தி கோட் படம் பார்க்க ரெடியாகிட்டாங்க.

இடையில் பழைய விஜய் பேட்டி வைரல் ஆனது. அதில் படம் ரிலீஸாகும்போது எல்லா தெய்வங்களையும் வேண்டிட்டு இருப்பேன், தூக்கம்வராது எனச் சொல்லியிருப்பார். காரணம் என்னவென்றால், விஜய்க்கு வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ரொம்ப போராடிதான் வெற்றிக்கனியைப் பறிப்பார். அது அவரது ஒவ்வொரு படங்களிலும் நிகழ்ந்து இருக்கு. அப்படி தான் இடையில் சீரடி கூட போய்ட்டு வந்தார்,விஜய்.

மறுபக்கம் நடிகர் விஜய்யின் கட்சிப்பணிகள் நடந்திட்டு இருக்கு. தளபதி 69-க்கான பணிகள் நடந்திட்டிருக்கு.

இந்த களேபரங்களுக்கு இடையே நடிகர் கார்த்தியை சோசியல் மீடியாவில் விஜய்யின் ரசிகர்கள் வைச்சு செய்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், வாரிசு பாடல் வெளியீட்டு விழாவில், தில் ராஜூ பேசினது மாதிரியே, மெய்யழகன் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் அது இல்லை, இது இல்லை அப்படின்னு தில் ராஜூ ஸ்டைலில் சொன்னார். அது தவறு. சரி ஓகே. படத்தின் தயாரிப்பாளர்கள் தி கோட் படத்தை ரசிகர்களோட உட்கார்ந்து படம்பார்க்க முடிவுஎடுத்திருக்காங்க’’ என்றார்.

நன்றி: செய்யாறு பாலு ஆஃபிசியல் யூட்யூப் சேனல்

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.