Premji: எப்படி இருந்த மனிஷன்.. இப்படி ஆகிட்டாரே.. புது மனைவிக்காக பிரேம்ஜி செய்த செயல் என்ன பாருங்க-see what premji did for wife in kitchen - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premji: எப்படி இருந்த மனிஷன்.. இப்படி ஆகிட்டாரே.. புது மனைவிக்காக பிரேம்ஜி செய்த செயல் என்ன பாருங்க

Premji: எப்படி இருந்த மனிஷன்.. இப்படி ஆகிட்டாரே.. புது மனைவிக்காக பிரேம்ஜி செய்த செயல் என்ன பாருங்க

Aarthi Balaji HT Tamil
Jun 20, 2024 11:00 AM IST

Premji: நடிகர் பிரேம்ஜி தற்போது அவரது வீட்டில் மனைவிக்காக சமையல் செய்து கொடுத்து இருக்கிறார். அதனை வீடியோ எடுத்து மனைவி இந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

எப்படி இருந்த மனிஷன்.. இப்படி ஆகிட்டாரே.. புது மனைவிக்காக பிரேம்ஜி செய்த செயல் என்ன பாருங்க
எப்படி இருந்த மனிஷன்.. இப்படி ஆகிட்டாரே.. புது மனைவிக்காக பிரேம்ஜி செய்த செயல் என்ன பாருங்க

களைகட்டிய திருமணம்

பிரேம்ஜியின் மனைவியின் பெயர் இந்து என்று வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பிரேம்ஜிக்கும், இந்துவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கரமித்து இருக்கிறது.

இந்து யார்?

45 வயதாகியும் ஏன் பிரேம்ஜி திருமணம் செய்யாமல் இருக்கிறார்? என்ற பேச்சு தான் எங்கு பார்த்தாலும் அவரை அனைவரும் கேட்பார்கள். ஆனால் தான் முரட்டு சிங்கிள் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில் திடீரென பிரேம்ஜி திருமண அறிவிப்பு வெளியானது.

காதல் திருமணமா?

அதனால் ஒரு வேலை அவர் காதல் திருமணம் செய்து இருப்பாரோ என அனைவருக்கும் சந்தேகம் எழுந்து உள்ளது.

பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் இந்து யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்துவிற்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளதாம். அவர் இதற்கு முன்பாக வங்கி துறையில் பணியாற்றி இருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கும் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.

சேலத்தைச் சேர்ந்த பெண்

பிரேம்ஜியின் மனைவியான இந்து சேலத்தைச் சேர்ந்தவர். அவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்து இருக்கிறார். அந்த வங்கியில் பிரேம்ஜி கணக்கு ஒன்றை வைத்து இருந்து இருக்கிறார். இந்த நிலையில், பிரேம்ஜி அங்கு சென்ற போது, இந்துவிற்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. காதல் பெற்றோர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களது சம்மதத்துடன் திருமணம் முடிந்து இருகிறது.

மனைவிக்காக பிரேம்ஜி செய்த செயல்

நடிகர் பிரேம்ஜி தற்போது அவரது வீட்டில் மனைவிக்காக சமையல் செய்து கொடுத்து இருக்கிறார். அதனை வீடியோ எடுத்து மனைவி இந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த பிரேம்ஜி, இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.