Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?-why is vijayakanth called captain a throwback to the actor 100th film captain prabhakaran - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 30, 2024 08:36 PM IST

Vijayakanth: சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்‌ஷனை கொடுத்து படத்தை அடுத்தக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்றிருந்தார் ஆர்.கே.செல்வமணி. - விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி?

ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

விஜயகாந்த்
விஜயகாந்த்

ஆர்.கே செல்வமணி கொடுத்த பரிசு

ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், எம்.என்.நம்பியார், மன்சூர் அலிகான், காந்திமதி, பொன்னம்பலம்,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வன அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

கேப்டன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்

இந்தப் படத்துக்காக விஜயகாந்த் சமரசம் இல்லாத உழைப்பைக் கொடுத்திருந்தார். ஆர்.கே செல்வமணியும் கொஞ்சம் மாறுதலாக விஜயகாந்திற்கு உரித்தான ஓப்பனிங் சாங் இல்லாமல், கிட்டத்தட்ட படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகே அவரை திரையில் காண்பித்தார். இருப்பினும், சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்‌ஷனை கொடுத்து படத்தை அடுத்தக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்றிருந்தார் ஆர்.கே.செல்வமணி.

கேப்டன் பிரபாகரன் படத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக ரம்யா கிருஷ்ணனின் நடனமும், கதாபாத்திரமும் அமைந்திருந்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆக்‌ஷன் கதையில ‘பாசமுள்ள பாண்டியரே, 'ஆட்டமா தேரோட்டமா’ என்று இரண்டு பாடல்களை வைத்து தெறிக்க விட்டிருப்பார் இளையராஜா. இன்று வரை பட்டி தொட்டி எங்கும் இப்பாடல்கள் ஒலிக்குது என்றால் அதற்கு இளையராஜாவின் நேர்த்தியான இசை தான் காரணம்.

முதலில் கிடையாது

முதலில் 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் இந்த படத்தில் கிடையாது. இதற்கு பதிலாக இன்னொரு பாட்டை கொடுத்திருந்தார் இளையராஜா. ஆர்.கே. செல்வமணி தனக்கு இந்த பாடல் வேண்டாம். வேற பாடல் வேணும்னு இளையராஜாகிட்ட கேட்க, போனை வைனு சொல்லி, இளையராஜா கட் பண்ணிட்டு இரவோடு இரவாக, ஆட்டமா தேரோட்டமா பாட்டை தயார் பண்ணி, மறுநாளே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அதைக் கேட்ட ஆர்.கே செல்வமணிக்கும் பாட்டு பிடித்துப்போக, அதை வெரைட்டியா படமாக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட காலத்தில் இதற்கு ஒரே விதி விலக்கு விஜயகாந்த் மட்டுமே. ஆம், இந்தப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக 275 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தின் தலைப்பில் இடம் பெற்ற 'கேப்டன்' என்பது பின்னாளில் விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிப்போனது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.