தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meiyazhagan: ‘எங்கள் இதயத்தில் இருந்து வரும் படைப்பு’ - கார்த்தியின் பிறந்தநாளுக்கு சூர்யா வெளியிட்ட மெய்யழகன் அறிவிப்பு

Meiyazhagan: ‘எங்கள் இதயத்தில் இருந்து வரும் படைப்பு’ - கார்த்தியின் பிறந்தநாளுக்கு சூர்யா வெளியிட்ட மெய்யழகன் அறிவிப்பு

Marimuthu M HT Tamil
May 25, 2024 03:12 PM IST

Meiyazhagan: அரவிந்த் சாமி, கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘மெய்யழகன்’ திரைப்பட போஸ்டர்களை, நடிகர் சூர்யா வெளியிட்டு, தனது சகோதரர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Meiyazhagan: ‘எங்கள் இதயத்தில் இருந்து வரும் படைப்பு’ - கார்த்தியின் பிறந்தநாளுக்கு சூர்யா வெளியிட்ட மெய்யழகன் அறிவிப்பு
Meiyazhagan: ‘எங்கள் இதயத்தில் இருந்து வரும் படைப்பு’ - கார்த்தியின் பிறந்தநாளுக்கு சூர்யா வெளியிட்ட மெய்யழகன் அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது சகோதரரும், நடிகருமான கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது வரவிருக்கும் படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. ‘96’ படப் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பெயர் ‘மெய்யழகன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மெய்யழகன் குறித்த சூர்யாவின் அறிவிப்பு:

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் சூர்யா இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். ஒரு சுவரொட்டியில் அரவிந்த் சாமி சைக்கிளில் செல்லும்போது, பின் பக்க இருக்கையில், கார்த்தி அமர்ந்திருக்கிறார். அதன்பின்னணியில் தஞ்சைப் பெரியகோயில் தெரிகிறது. இதன்மூலம், இப்படம் தஞ்சாவூரை அடிப்படையாகக் கொண்டது என்பதை உணர முடிகிறது. 

இரண்டாவது போஸ்டரில், கார்த்தி முகத்தில் பரந்த புன்னகையுடன் கண்களில் ஒரு காளையைப் பார்க்கிறார். 

இதுதொடர்பாக போஸ்டரைப் பகிர்ந்த சூர்யா, "எங்கள் இதயத்திலிருந்து வரும் ஒரு படைப்பு!" என்று கேப்சனைப் பதிவிட்டு எழுதியுள்ளார். மேலும் இன்னொரு பதிவில், தனது சகோதரர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், எப்போதும் நல்ல சப்ஜெக்ட்களை தேர்ந்தெடுப்பதற்காக பாராட்டினார்

அந்த இன்னொரு  பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி. அடுத்தடுத்து நல்ல சினிமாவைக் கொடுப்பதற்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.

படத்தின் தலைப்பின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை விளக்கிய கார்த்தி, "#Meiyazhagan= மெய் + அழகன். அழகு என்பது எப்போதும் நம் இதயத்தில் இருப்பதுதான்’’ எனப் பதிவிட்டுள்ளார். 

மெய்யழகன் படம் பற்றிய முக்கியத் தகவல்:

மெய் என்றால் தமிழில், உடல் என்று பொருள். அழகன் என்றால் உண்மை என்று பொருள். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திற்குப் பிறகு, பிரேம் இயக்கும் தமிழ்ப் படம், மெய்யழகன். இவருடன் இணைந்து கண்ணன் சுந்தரம் மற்றும் என்.அரவிந்தன் ஆகியோரும் இணை இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். 96 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைக்கிறார். 96 படத்தில் இல்லாததுபோல, இந்தப் படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டர் இல்லை.

இப்படத்தின் ஒளிப்பதிவினை மகேந்திரன் ஜெயராஜூ செய்கிறார். எடிட்டிங்கினை கோவிந்தராஜ் செய்கின்றார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் உமா தேவி ஆகியோர் எழுதுகின்றனர். கலை பணியினை செ.ஐயப்பனும் மக்கள் தொடர்பை ஜான்சனும் செய்கின்றனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் ’கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஒரு இரக்கமற்ற போர்வீரனாக ஒரு புதிய தோற்றத்திலும், நீண்ட பயங்கரமான முடிகள், கோடுகள் கொண்ட கண்கள் மற்றும் வடுக்களுடன் இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. சுதா கொங்கராவின் இந்நிலையில் நடிகர் சூர்யா ‘சர்ஃபிரா’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதில் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ’’வா வாத்தியாரே’’ இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25ஆவது படம், ஜப்பான் எதிர்பார்த்த அளவுபெரும் வெற்றியினைப் பெறவில்லை.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்