ஓவரா பேசிப் பேசியே தலையில் துண்டைப் போட்ட கங்குவா டீம்! 3ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஓவரா பேசிப் பேசியே தலையில் துண்டைப் போட்ட கங்குவா டீம்! 3ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஓவரா பேசிப் பேசியே தலையில் துண்டைப் போட்ட கங்குவா டீம்! 3ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Nov 17, 2024 06:58 AM IST

கங்குவா திரைப்படம் வெளியான 3ம் நாளில் எவ்வளவு வசூலைப் பெற்றுள்ளது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

ஓவரா பேசிப் பேசியே தலையில் துண்டைப் போட்ட கங்குவா டீம்! 3ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஓவரா பேசிப் பேசியே தலையில் துண்டைப் போட்ட கங்குவா டீம்! 3ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

கங்குவா வசூல்

கங்குவா திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 89.32 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்புக் குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கங்குவா படத்தின் வசூல் நிலவரம் குறித்து sancnilk.com எனும் வலைதளம் வெளியிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 14.9 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் படம் வெளியான 3ம் நாளான நேற்று முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லாமல் வெறும் 6.32 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 3 நாட்களில் மொத்தமாக படம் 25.83 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருந்தது.

அதேபோல இந்திய அளவில் படம் வெளியான 2 நாட்களில் மொத்தம் 43.71 கோடி ரூபாயும் உலக அளவில் படம் 54 கோடி ரூபாயும் வசூலித்ததாகத் தெரிகிறது.

சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே எதிர்மறை விமர்சனங்கள் அதிகளவில் இருந்ததால், படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

கங்குவா ரெக்கார்டு

ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.

ஆராய்ச்சியில் இறங்கிய சிறுத்தை சிவா

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும்.

இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

கங்குவா வசூல் எப்படி இருக்கும்?

கங்குவா திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.

கங்குவாவால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்ட முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் செய்தியாளர்கல் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.