அஜித் சிவா கூட்டணி உறுதி.. அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்; அஜித்துக்கு ஏன் சிவாவை பிடிக்கிறது? - யார் இந்த சிறுத்தை சிவா?
அஜித்திற்கு சிறுத்தை சிவாவை ஏன் இவ்வளவு பிடிக்கிறது தெரியுமா? - உண்மையை உடைத்த பிரபலம்!
அட்டர் ஃப்ளாப் ஆன கங்குவா
பொங்கல் பண்டிகை ஒட்டி பேட்ட திரைப்படமும், விசுவாசம் திரைப்படமும் ஒன்றுக்கொன்று மோதின. பேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும், விசுவாசம் திரைப்படம் குடும்ப பாங்கான கதை என்பதால், அந்த படத்தை விட பிரமாண்ட வெற்றியை விசுவாசம் பெற்றது. இதையடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டினார்.
கதை கேட்ட ரஜினி
இதனையடுத்து ரஜினி சிவாவிடம் கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்க, அப்போது சொல்லப்பட்ட கதை தான் கங்குவா கதை என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அது பல்வேறு கட்டங்களாக சென்று கடைசியில் இருவரும் அண்ணாத்த என்ற படத்தில் இணைந்தார்கள். அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து தான் அவர் கங்குவா படத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கினார். அந்த படம் தற்போது அட்டர் ஃப்ளாப்பாக மாறியிருக்கிறது.
பலர் அந்தப் படத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதுவெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், தற்போது ஒரு விஷயம் கோலிவுட் வட்டாரத்தை சுற்றி வருகிறது, அது என்னவென்றால் அஜித் சிவாவிடம் கலங்க வேண்டாம், நாம் அடுத்ததாக இணையலாம். அந்த படத்தின் படப்பிடிப்பை 2025 மே மாதம் தொடங்குவோம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில், அஜித் அப்படி செய்யக் கூடியவர் தான். காரணம் என்னவென்றால், எல்லோரும் செய்ய வேண்டாம் என்பதை அவர் செய்தே தீருவேன் என்று நிற்கக் கூடியவர். சிறுத்தை சிவாவை அஜித்திற்கு அவ்வளவு பிடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சில இயக்குநர்கள், நடிகர்களுக்கான இயக்குநர்களாக இருப்பார்கள். அதாவது எப்படி என்றால், சில நடிகர்களுக்கு ஒன் மோர் கேட்டால் பிடிக்காது. அந்த மாதிரி சமயங்களில், அவர்களின் மனநிலை அறிந்து, நடிகரிடம் கிடைத்த டேக்கை ஓகே ஆக்கிவிட்டு, அந்த காட்சியை வேறு விதமாக மாற்றி விடுவார்கள். சில இயக்குநர்களை நடிகர்கள்தான் வழிநடத்துவார்கள்.
யார் இந்த சிறுத்தை சிவா!
ஆனால் சிவாவை பொறுத்தவரை அவர் ஒரு குழந்தை போல..அதுதான் அனைவருக்கும் அவரிடம் பிடித்த குணம். அருணாச்சலம் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரின் பேரன்தான் இந்த சிறுத்தை சிவா தெலுங்கில் சில படங்களை இயக்கியவர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான விக்ரமடு படத்தை சிறுத்தை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் பின்னர்தான் அவர் சிறுத்தை சிவாவாக மாறினார். தொடர்ந்து அஜித்துடன் படங்கள் செய்தார்.
பொதுவாக அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டது என்றால், அவரை எக்காலத்திலும் கைவிடமாட்டார் ஆகையால் அஜித்துடன் சிறுத்தை சிவா இணைவது உண்மைதான். தற்போது கிடைத்துள்ள தோல்வியால், சிவா உத்வேகம் பெற்று, அஜித்தின் அடுத்த படத்தை வேறு மாதிரி எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்." என்று பேசினார்.
டாபிக்ஸ்