'கங்குவாவ பாத்து மக்கள் எல்லாம் சிலிர்த்துப் போயிட்டாங்க.. மக்களின் ரசனைய நிரூபிச்சிட்டாங்க' .. ஞானவேல் ராஜா ஓபன் டாக்
கங்குவா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் கெஸ்ட் ரோலை நாங்கள் மறைத்து வைத்திருந்ததால் தான் அதைப் பார்த்து மக்கள் சிலிர்த்துப் போயுள்ளனர் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. சிறுத்தை சிவா 350 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரம்மாண்ட ஆக்ஷன் கலந்த பேன்டஸி திரைப்படமாக இதை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் ஞானவேல் ராஜா, வம்சி, பிரமோத் ஆகியோர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.
கங்குவா வெற்றி
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் 11,500 தியேட்டர்களில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'கங்குவா' படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெலுங்கு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கங்குவா படம் வெற்றி குறித்த சுவாரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தெலுங்கு மக்களின் ரசனை நிரூபனமானது
'கங்குவா' படத்திற்காக நாங்கள் மூன்று வருட கடின உழைப்பை கொடுத்துள்ளோம். அதன் விளைவாகவே இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. நல்ல படங்களை ஆதரிப்பதில் தெலுங்கு ரசிகர்கள் ரசனை உள்ளவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 'கங்குவா' படம் தமிழை விட தெலுங்கில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகவே உள்ளன. அவர்கள் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு வருகின்றனர்.
பெரிய ஓப்பனிங்
'கங்குவா' படத்திற்கு ஹிந்தி மக்களிடம் போதிய வரவேற்பு இருக்கிறது. வார நாட்களிலேயே கங்குவா நல்ல வசூலைத் தான் பெற்று வருகிறது என பல இடங்களில் இருந்து தகவல்கள் வருகிறது. ஹிந்தியில் வெளியான மற்ற தென்னிந்திய படங்களைக் காட்டிலும் கங்குவாவிற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல மக்களின் ஆரவாரங்களை எங்கள் படக்குழு உறுப்பினர்கள் திரையரங்குகளுக்கே சென்று பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
நாங்கள் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளோம்
சமீப காலங்களில் மக்களுக்கு பெரிய திரைப்படங்களை தியேட்டர்களில் பார்க்கும் ஆசை அதிகரித்துள்ளது. 'கங்குவா'வில் நாங்கள் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகளும், மேக்கப்பும், கலைப் பொருட்களும் எது நிஜம் எது போலியானவை எனத் தெரியாத அளவிற்கு துல்லியமாக உள்ளன.
எல்லாமே பக்காவா ரெடி பண்னிருக்கோம்
ஒரு சினிமா தயாரிப்பாளராக, உயர்ந்த தரத்தில் படம் கொண்டு செல்லப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லைவ் லொகேஷன்கள் மற்றும் செட்களை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த குழுவும் ஒற்றுமையாக செயல்பட்டு, சரியான அவுட்புட்டைக் கொடுத்துள்ளது. திரையில் படம் பார்க்கும் போது எது செட், எது சிஜி என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிவா எனக்கு துணையாக இருந்தார்
இந்த படத்தின் இயக்குநர் சிவா, படத் தயாரிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். படத்தின் கதையையும், கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனத்தையும் கலந்து அவர் பக்கா கமர்ஷியல் அம்சங்களுடன் 'கங்குவா' படத்தை உருவாக்கியிருக்கிறார்.
மக்கள் சிலிர்த்துவிட்டனர்
படத்தின் க்ளைமாக்ஸில் வரும் கெஸ்ட் ரோலை மக்கள் மிகவும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த கதாப்பாத்திரம் குறித்த தகவல்களை நாங்கள் மறைத்து வைத்திருந்ததால் தான் இன்று திரையரங்குகளில் ரசிகர்கள் சிலிர்த்துப் போயிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்