தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan On Shah Rukh Khan:‘விமானம் வாங்க ஆசைப்பட்ட ஷாருக் கான்.. அதை இப்டி பாருங்க’.. பொடி வைச்சு பேசிய கமல்ஹாசன்

Kamal Haasan On Shah Rukh Khan:‘விமானம் வாங்க ஆசைப்பட்ட ஷாருக் கான்.. அதை இப்டி பாருங்க’.. பொடி வைச்சு பேசிய கமல்ஹாசன்

Marimuthu M HT Tamil
Apr 29, 2024 10:54 PM IST

Kamal Haasan On Shah Rukh Khan: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் உரையாடினார். அங்கு அவர் தனது நிறைவேறாத ஆசைகள் சிலவற்றைப் பற்றி பேசினார். அதில் ஷாருக்கான் பற்றியும் பேசியுள்ளார்.

ஷாருக்கான் பற்றி பேசிய கமல்
ஷாருக்கான் பற்றி பேசிய கமல்

ட்ரெண்டிங் செய்திகள்

தந்தை கமல்ஹாசன் -மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் சேர்ந்து, காதல் முதல் அனைத்தையும் விவாதிக்கும் ’லெஜஸி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். 

நேர்மையாக நடந்த உரையாடலின்போது, கமல் ஹாசன் பொருள் ஆசைகள் குறித்த தனது எண்ணங்களைப் பற்றி விவாதித்தார். மேலும் ஷாருக்கானின் பெயரையும் அப்போது உச்சரித்தார். 

கமல் என்ன சொன்னார்?:

அந்த உரையாடலின் போது, நிறைவேறாத ஒரு ஆசை பற்றி ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமலிடம் கேட்டபோது அவர் சொன்னது, "நிறைய இருக்கிறது. நிறையவே இருக்கிறது. அவை அனைத்தையும் பட்டியலிடுவது என் நோக்கமல்ல. அவற்றைப் பட்டியலிட்டால், 'எனக்கு இது, அது, இது வேண்டும்' என்று நீங்கள் செல்ல வேண்டும். 

எனக்கு நானே நினைவுபடுத்திக்கொள்கிறேன். சென்னை - எல்டாம்ஸ் சாலையில் (அவரது பழைய குடும்ப வீடு அமைந்துள்ள இடம்), என் தந்தை எனக்கு இரண்டு பியானோக்களுக்கு ஏற்ற ஒரு சிறிய அறையைக் கொடுத்தார். அது மேல் மாடியில் இருந்தது. அதனால், வெப்பம் தகிக்கும். கழிவறை மூன்று மாடிகள் கீழே இருந்தது. என் தந்தையின் அணுகுமுறை, உனக்கு நிறையவே தெரியும்,  ’இப்படியே இருக்க முடியாது என்று நீ நினைக்கும்போது, என்னிடம் சொல், நீ வளர்க்க நான் உனக்கு ஒரு பசு மாடு வாங்கித் தருகிறேன்' என்றார்’’ இவ்வாறு அந்த உரையாடலின் துவக்கம் இருந்தது.

'அவரிடம் இன்னும் ஒரு பட்டியல் இருப்பதால் நான் அவரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்'

மேலும் கமல்ஹாசன் தொடர்ந்து பேசுகையில், "எனவே, நான் படுத்துக்கொண்டு நினைத்தேன். எனக்கு மாதத்திற்கு ரூ.10,000 மட்டும் கிடைக்கவேண்டும். அந்த பணத்தை வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியலில் உள்ள விஷயங்கள் கூட எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அந்த ஆசைகள் என்னை தூங்க வைத்தன. நான் ஒரு ஸ்கூட்டர் வாங்க விரும்பினேன். பின்னர் நான் ஒரு கார் வாங்க விரும்பினேன். இத்தனை சாமான்களையும் வாங்கும் அளவுக்கு என்னிடம் தற்போது பணம் இருக்கிறது. சமீபத்தில் ஷாருக்கானின் ஒரு பேட்டி ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர் தனக்கு விமானம் வாங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரிடம் இன்னும் ஒரு பட்டியல் இருப்பதால் அவரைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.

 தனிப்பட்ட முறையில், நான் எந்த பட்டியலையும் வைத்திருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நான் துறவறம் ஏற்க முயலவில்லை. இதற்கு முடிவு எங்கே? சரி, எனக்கு ஒரு விமானம் வேண்டும் என்றால், நான் ஆச்சரியமாக கேட்கிறேன். நான் அதை எவ்வளவு பயன்படுத்துவேன்? கொடைக்கானலில் இப்படி ஒரு பெரிய வீடு வாங்கினால் எவ்வளவு நேரம் அங்கே செலவிடுவேன்? அதிகபட்சம் ஒரு மாதம் இருக்குமா?. அப்புறம் இங்க ஓடி வருவேன். அப்புறம் நான் ஏன் அங்கு பங்களா வாங்கவேண்டும்?"’’ எனக் கூறினார்.

கமல்ஹாசன் அடுத்ததாக ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் மணிரத்னத்தின் ’தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜூன் 27அன்று வெளியாகும் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 ஏ.டி. படத்திலும் அவர் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார், கமல்ஹாசன். இதற்கிடையில்,இயக்குநர் பிரசாந்த் நீலின் சலார் பாகம் 2 படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்