Santhanam: சிம்புவால் சந்தானத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. தனுஷ் கூட இருந்த பாண்டிங்: காதல் சுகுமார் ஷேரிங்ஸ்-kadhal sukumar talks about the embarrassment caused to santhanam by simbu and the bonding with dhanush - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Santhanam: சிம்புவால் சந்தானத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. தனுஷ் கூட இருந்த பாண்டிங்: காதல் சுகுமார் ஷேரிங்ஸ்

Santhanam: சிம்புவால் சந்தானத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. தனுஷ் கூட இருந்த பாண்டிங்: காதல் சுகுமார் ஷேரிங்ஸ்

Marimuthu M HT Tamil
Sep 14, 2024 08:30 PM IST

Santhanam: சிம்புவால் சந்தானத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடம் மற்றும் தனுஷ் கூட இருந்த பாண்டிங் குறித்து காதல் சுகுமார் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Santhanam: சிம்புவால் சந்தானத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. தனுஷ்கூட இருந்த பாண்டிங்: காதல் சுகுமார் ஷேரிங்ஸ்
Santhanam: சிம்புவால் சந்தானத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. தனுஷ்கூட இருந்த பாண்டிங்: காதல் சுகுமார் ஷேரிங்ஸ்

இதுகுறித்து நடிகர் காதல் சுகுமார், ரெட் நூல் யூட்யூப்-க்கு அளித்த பேட்டியில், ‘’காதல் அழிவதில்லை படத்தில் கூட்டத்தில் பின்னாடி தான், என் கூட சந்தானம் நின்றுகொண்டு இருப்பார். அப்போது நானும் கருணாஸ் சாரும் பீக்கில் இருக்கோம். நான் ராஜ் டிவியில் ’’ஊர் வம்பு’’ நடிச்சு என்னும் நிகழ்ச்சி வந்ததால், கருணாஸ் அப்போ தான் ’’நந்தா’’ படம் பண்ணிட்டு வந்தார். அப்போது ’காதல் அழிவதில்லை’ சூட்டிங்கில் பின்னாடி நிற்கும் சந்தானம், கூட்டத்தில் இருந்து ஏதாவது வசனம் கிடைக்குமான்னு தவிப்பாரு. அப்போது கூல் சுரேஷும் இருப்பார். அடுத்து இயக்குநர் கொடுக்கிற வசனங்களில், அவர்கிட்டப்பேசி ஒரு வசனத்தை சந்தானத்துக்கு கொடுப்போம். அவர் பேசுறதுக்குள்ள கூல் சுரேஷ் பேசிடுவார்.

உடனே, சந்தானம், அவர் கொடுத்ததே ஒரு அப்பம், அதிலேயும் ஒரு ஆப்பா அப்படின்னு சொல்லி கலாய்ச்சிடுவார். அப்படியே நான் ராஜ் டிவி போய் பிஸியாகிட்டேன். சந்தானமும் விஜய் டிவி போய் லொள்ளு சபா போய்ட்டார். அப்போ, சந்தானத்துக்கு கல்யாணம்னு சொல்லி, எனக்கு போன் அடிக்கிறார். அப்போது சிம்பு என் கல்யாணத்துக்கு வருவாரா அப்படின்னு கேட்கிறார். உடனே சிம்புவுக்கு, நான் போன் அடிச்சி, மச்சான் சந்தானத்துக்கு கல்யாணம்னு சொல்றேன். ஏன் அவரோட முதல் படத்தில் இருந்து நட்பு இருக்கு. யோவ் நான் அவரோட ஃபேன்யா அப்பட்டின்னு சொல்றாப்புல. பிறகு நேரில் சந்திக்கிறோம். லொள்ளு சபாவில், தன் அப்பா டி.ராஜேந்தர் மாதிரி நடிச்சதை சூப்பர்ன்னு சொல்லி வாழ்த்திட்டு, சந்தானத்தோட கல்யாணத்துக்கு வர்றேன்னு சொல்லிடுறார்.

சந்தானம் கல்யாணத்தில் சிம்புவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்:

நாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே போறோம். சந்தானம் ஊர், பொழிச்சலூர். போறவழி எல்லாம் சிம்புவை வரவேற்று, ரசிகர்கள் கட் அவுட் வச்சிருக்காங்க. தவுசன்ட் வாலா வெடிக்கிறதுக்கு 5 வாங்கிவைச்சிருக்காங்க. ரிசப்ஷன் நேரத்தில் சந்தானம் என்னையே பார்த்திட்டு இருக்கான். சரின்னு சிம்புவுக்கு கால் பண்றேன். கொஞ்ச நேரம் கழிச்சி, சிம்பு கால் பிக் பண்ணுனார். விசயத்தை ‘மச்சி. நான் சிங்கப்பூரில் இருக்கேன். மறந்துட்டேன். தப்பா நினைச்சுக்காத. சொல்லிடுன்னு’ சொல்லிட்டார். இந்த விஷயத்தைச் சொன்னவுடன், சந்தானம் கடுப்பாகிட்டார். ஏனென்றால் எல்லாரும் எதிர்பார்த்து காத்திருக்காங்க. உடனே சந்தானத்தோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும், இவர் பெரிய நடிகர் அப்படின்னு சொல்லிட்டு கலாய்ச்சுட்டுப் போய்ட்டாங்க.

மூணு நாள் கழிச்சு எனக்குப் போன் அடிச்சார். நீ எப்படியாவது சந்தானத்தை ஈவினிங் கூப்பிட்டுவான்னு சொல்லிட்டார். ஈவினிங் சந்தானத்தை கூப்பிட்டுட்டு சிம்புவை பார்க்கப்போறேன். போனவுடன் கட்டிப்பிடிச்சி, மன்னிச்சிருங்க பிரதர்ன்னு சொல்லி சந்தானத்துக்கிட்டப் பேசுறார். நீங்க என்ன கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இந்த வலியை எப்படியாவது போக்கணும்ங்க. அப்பதான், மன்மதன் படத்தின் காலேஜ் போர்ஷன் சூட்டிங் போயிட்டு இருக்கு. அதில் ஒரு கேரக்டர் உருவாக்கி, நான்காவது நாள், சந்தானத்தை சூட்டிங்கில் நடிக்க வைச்சிட்டார்.

படம் ரிலீஸ் ஆனதும், வேற லெவல். படம் ஹிட். டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வருது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தோட சூட்டிங் பொள்ளாச்சியில் நடக்குது. நான் என்னோட டைரக்‌ஷனுக்கான படத்துக்கு கதை சொல்ல, சந்தானத்தைப் பார்க்கப்போறேன். என்னோட தயாரிப்புக்குழுவோட நிர்வாகி வந்திருக்கார். கதை நல்லா இருக்கு.

நல்லா திட்டமிட்டுப்பண்ணு அப்படின்னு சந்தானம் சொல்றார். சுகுமார் மட்டும் தான் மச்சான்னு கூப்பிடுற ஒரு நண்பன்னு அங்க சொல்றாப்புல. அவன் இல்லையென்றால், சினிமாவில் இந்த இடத்தில் நான் இருந்திருக்கமாட்டேன்ங்கிறது எனக்கே தெரியும். அவன் ஒரு பக்கம் முயற்சி பண்ணிட்டே இருக்கான். நான் ஒரு பக்கம் போய்ட்டேன். இதுவரைக்கும் அவன் வந்து ஒரு உதவின்னு கேட்டதே கிடையாது அப்படின்னு சொல்றார்.

சந்தானம் எனக்கு கொடுத்த உறுதி: காதல் சுகுமார்

இதுவரை நான் எதுவும் சந்தானத்துக்கிட்ட் கேட்கமாட்டேன் சார். நான் என் முயற்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 200 படங்கள் நடிச்சிட்டேன் சார். அவங்களுக்குத் தேவையென்றால், கண்டிப்பாக கூப்பிடுவாங்கன்னு விட்டுட்டேன். ஆனால், சுகுமார் கேட்டிருந்தால் செஞ்சிருப்பேன்னு சந்தானம் சொல்றார். ஸ்ரீநாத் என்கிட்டே கேட்டார். அப்படி சுகுமார் கேட்டிருந்தால், எப்போயோ ஒரு படம் கொடுத்திருப்பேன் அப்படின்னு சந்தானம் சொல்றார்.

அடப்பாவின்னு இருந்துச்சு. சிம்புவும் பண்ணிருப்பார். நானும் ஒரு சின்ன படம் பண்ணாமல் ஒரு நல்ல படம் பண்ணிட்டுப் போய், சிம்பு கிட்டப்போனால், நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அது தனுஷ் கூட செய்வார். திருவிளையாடற்புராணம் பண்ணும்போது, தனுஷ் கூடேயும் நல்ல பாண்டிங். அப்போ எல்லாம், உலகப்படங்கள் பார்க்க நான் கேஸட் கொண்டுபோய் கொடுப்பேன்.

ஏனென்றால், 2000 பட கலெக்‌ஷன் இருந்துச்சு. அதனால், ரெவரன்ஸ் கேட்கும்போது, சிம்பு மற்றும் தனுஷுக்கு எல்லாம் நான் தான் கேஸட் கொடுப்பேன். அந்த பாண்டிங் இப்பயும் இருக்கு. நாம் யார்கிட்டேயும் உதவி கேட்கிறதில்லை. அது அவங்க மனசில் இருக்கு. அப்ப தான், சந்தானம் சொன்னார். நாம இந்தப் படம் பண்ண ரெடின்னு சொன்னார். புரொடியூசருக்கு வெயிட்டிங்’’ என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.