தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu With Santhanam : சிம்புவால் மணமேடையிலேயே ஏமாற்றம் அடைந்த சந்தானம்.. "மன்மதன்" வாய்ப்பு கிடைத்த கதை இதுதான்!

Simbu with Santhanam : சிம்புவால் மணமேடையிலேயே ஏமாற்றம் அடைந்த சந்தானம்.. "மன்மதன்" வாய்ப்பு கிடைத்த கதை இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 30, 2024 04:59 PM IST

Simbu with Santhanam : இந்த வலி கண்டிப்பா நா போக்குவேன் நீங்க என்ன கஷ்டப்பட்டுருப்பீங்கன்னு எனக்கு தெரியும்னு சொன்னார். அப்பதான் மன்மதன் படம் சூட்டிங் போயிட்டு இருந்தது. அதுல ஒரு கேரக்டர எக்ஸ்ட்ரா கிரியேட் பண்ணி என்டிஆர் மாதிரி நடிக்க வச்சார். அது வேற லெவல் ஹிட் ஆனது என்றார் காதல் சுகுமார்.

சிம்புவால் மணமேடையிலேயே ஏமாற்றம் அடைந்த சந்தானம்.. "மன்மதன்" வாய்ப்பு கிடைத்த கதை இதுதான்!
சிம்புவால் மணமேடையிலேயே ஏமாற்றம் அடைந்த சந்தானம்.. "மன்மதன்" வாய்ப்பு கிடைத்த கதை இதுதான்!

ட்ரெண்டிங் செய்திகள்

காதல் அழிவதில்லை சிம்புவின் முதல் படத்தில் தொடங்கி நாங்கள் ஒன்றாக தான் வந்தோம்.

நானும் கர்ணாஸ் சாரும் அப்ப ஹிட். சந்தானம் கூல் சுரேஷ் எல்லாரும் இருப்பாங்க. அப்ப ஒரு நாள் சந்தானம் மச்சி அப்படினு என்ன கூப்பிட்டார். மேரேஜ் டா என்றார். சூப்பர் மச்சான் என்றேன். சிம்பு வ கூப்பிட்டா வருவாரா என என்கிட்ட கேட்டார். உடனே அதெல்லாம் வருவார் நீதான் படம் நடிச்சுருக்கயே என்றேன்.

உடனே நான் நேரா சிம்புவுக்கு போன் பண்ணி மச்சான் சந்தானத்துக்கு மேரேஜ் என்றேன். யார் என்றதும் லொல்லு சபா என்றதும்.. ஏய் நா அவர் ஃபேன்யா.. தீவிரமான ஃபேன்யா கண்டிப்பா வர்றேன் என்றார்.

அவரை நேராக பார்க்க போன போது சந்தானத்தை கட்டிப்பிடித்து டி.ஆர் மாதிரி லொல்லு சபாவில் பண்ணது எனக்கு ரொம்ப புடிச்சதுங்க என்றார்.

சந்தானம் திருமணத்தில் சிம்புவுக்கு கட்டவுட் 

சந்தானம் கல்யாணத்தன்னைக்கு போற ரூட் எல்லாம் எங்கள் நண்பனின் திருமணத்திற்கு வருகை தரும் அன்பு சிம்பு வருக வருகனு ஒரு 10 இடத்தில் ரசிகர்கள் கட்டவுட் வச்சுருந்தாங்க. வெடியெல்லாம் வாங்கி வச்சுருந்தாக.

ரிஷப்சன் போயிட்டு இருக்கு. 8 மணிக்கு தான் சிம்பு வருவேன்னு சொல்லி இருந்தார். மேடையில் இருந்த சந்தானம் அப்ப அப்ப என்னை பார்த்து எங்கடா எங்கடான்னு கேட்டுகிட்டே இருக்கான். இருடானு நா சிம்புவிற்கு போன் பண்ணா ரிங் போகல.. இரண்டு, மூன்று முறைக்கு பின்னர் 4 ஆவது முறை போன் எடுத்து ஹலோ யாருங்க அப்படின்னா.. நா சுகுமார் பேசுறேன்.. இன்னைக்கு சந்தானம் கல்யாணத்துக்கு நீ வருவன்னு சொல்லி எல்லாரும் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ரசிகர் மன்றத்தில இருந்து எல்லாரும் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்றேன். உடனே சிம்பு இல்ல ..  இப்ப நா சிங்கப்பூர்ல இருக்கேன்னா.. மறந்துட்டேன் என்றார்.

அடுத்து சந்தானத்துட்ட போயிட்டு மச்சி.. சிம்பு பாரின்ல இருக்கார். வர்றது கொஞ்சம் கஷ்டம் தான் என்றதும் சந்தானம் ஒரு மாதிரி கலங்கிட்டார்.. அப்போது விழாவிற்கு வந்தவர்கள் ஆமா இவர் பெரிய நடிகரு.. சிம்பு அப்படியே வந்துருவார் அவர் கல்யாணத்திற்கு என்று அவரது நண்பர்கள் கலாய்த்தனர்.

மன்மதன் பட வாய்ப்பு

அடுத்து ஒரு 3 நாள் கழித்து சிம்பு எனக்கு போன் செய்தார். என்ன மச்சான் என கேட்டதற்கு நீ என்ன செய்வயோ தெரியாது சாய்ங்காலம் சந்தானத்தை கூப்பிட்டு வர்ற என்ற என்றார். நான் சாய்ந்தரம் சந்தானத்தை கூப்பிட்டு போனேன். சந்தானத்த பார்த்ததும் சிம்பு ஓடி வந்து கட்டி பிடிச்சுக்கிட்டார். அப்பறம் சாரி புரோ.. சாரி பிரதர் மன்னிச்சுடுங்க.. ஆக்சுவலா நா மறந்துட்டேன். யாராவது நியாபக படுத்திருக்கணும். 

நா உங்களுக்கு ஏதாவது பண்ணணுங்க .. இந்த வலிய கண்டிப்பா நா போக்குவேன் நீங்க என்ன கஷ்டப்பட்டுருப்பீங்கன்னு எனக்கு தெரியும்னு சொன்னார். அப்பதான் மன்மதன் படம் சூட்டிங் போயிட்டு இருந்தது. அதுல ஒரு கேரக்டர எக்ஸ்ட்ரா கிரியேட் பண்ணி என்டிஆர் மாதிரி நடிக்க வச்சார். அடுத்த 4 ஆவது நாளே சூட்டிங் வச்சார். அடுத்து படம் ரிலீசாகுது. அது வேற லெவல் ஹிட் ஆனது என்றார் காதல் சுகுமார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்