தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jyotika: 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ரீ என்ட்ரி;மாஸ் படத்தில் இணைந்த ஜோதிகா.. யார் ஹீரோ தெரியுமா?

Jyotika: 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ரீ என்ட்ரி;மாஸ் படத்தில் இணைந்த ஜோதிகா.. யார் ஹீரோ தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
May 15, 2023 12:16 PM IST

திரைப்படத்தை இயக்குநர் விகாஸ் பால் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘குயின்’ ‘சூப்பர் 30’ ‘குட் பை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Jyotika
Jyotika

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக அஜய் தேவ்கன் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார்.இந்தப்படத்தில் அவர் உடன் நடிகர் மாதவனும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டி ருந்த நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவும் இந்தப்படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். 

நடிகை ஜோதிகா இந்தியில் கடைசியாக 1998 ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற படத்தில் அக்‌ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அஜய்தேவ்கன் -மாதவன் படத்தில் கமிட் ஆனதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் ரீ -என்ட்ரி கொடுக்கிறார்

இந்தத்திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் விகாஸ் பால் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘குயின்’ ‘சூப்பர் 30’ ‘குட் பை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்