சினிமாவைவிட்டு ஒதுங்கும் அஜித்.. கார் ரேஸில் பங்கெடுக்க தீவிரப் பயிற்சி.. மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சினிமாவைவிட்டு ஒதுங்கும் அஜித்.. கார் ரேஸில் பங்கெடுக்க தீவிரப் பயிற்சி.. மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு

சினிமாவைவிட்டு ஒதுங்கும் அஜித்.. கார் ரேஸில் பங்கெடுக்க தீவிரப் பயிற்சி.. மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு

Marimuthu M HT Tamil
Oct 06, 2024 12:22 PM IST

சினிமாவைவிட்டு ஒதுங்கும் அஜித்.. கார் ரேஸில் பங்கெடுக்க தீவிர பயிற்சி என மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.

சினிமாவைவிட்டு ஒதுங்கும் அஜித்.. கார் ரேஸில் பங்கெடுக்க தீவிர பயிற்சி.. மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு
சினிமாவைவிட்டு ஒதுங்கும் அஜித்.. கார் ரேஸில் பங்கெடுக்க தீவிர பயிற்சி.. மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு

இதுதொடர்பாக மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருப்பதாவது, ‘’கேள்வி: விஜய் சினிமாவைவிட்டுவிட்டு அரசியலுக்குப் போகிறார். அப்போது விஜய் -அஜித் என்ற ஒப்பீடு அடுத்து என்ன ஆகும். அடுத்து சினிமாவைவிட்டு டிராவலிங் பிசினஸுக்குப் போய்விடுவாரா? உண்மை என்ன?

பதில்: அஜித் தான் சினிமாவை விட்டுப்போவதாக அறிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என ஒப்பிடும் ரசிகர்கள், அவர்களுக்கிடையே போட்டி இல்லை என்றாலும் அதுதான் அவர்களின் வெற்றிக்கான விஷயமே. தொடர்ந்து பட வெளியீட்டின்போது ரசிகர்கள் செய்யும் பால் அபிஷேகம் இதெல்லாம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இது எல்லா மொழிகளிலும் உண்டு. இதுதான் அவர்களின் பலமே.

தான் தான் பெரியவன் எனக் காட்டுவது படத்தை ஓடவைக்கும் தந்திரம், இதனால் கிடைக்கும் சம்பள உயர்வு என பல நன்மைகள் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்குக் கிடைக்கின்றன.

’அஜித் தற்போது என்ன செய்கிறார்?’

விஜய் அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டுப்பணிகளில் மும்முரமாக இருக்கிறார். விஜய் சினிமாவைவிட்டுப்போனபின், இவரைத்தாண்டி தான் மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டுமா என்னும் மனநிலை அஜித்துக்கு வந்ததால் தான், கார் ரேஸுக்குப் போயிட்டாரோன்னு எண்ணம் இருக்குது.

இன்னொரு பக்கம், விடாமுயற்சி சரியாக முடியவில்லை. மறுபக்கம், குட் பேட் அக்லி பாதி சூட்டிங் ஹைதாராபாத்தில் முடிந்து ஸ்பெயினுக்குப் படக்குழு போகப்போகிறது. இப்படியிருக்கையில் அஜித், 2025 ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் தான் கலந்துகொள்ளப்போவதாக தன் மேலாளர் மூலம் கூறியிருக்கிறார். அதற்கான ரிகர்சலாக துபாயில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார், அஜித். இந்நிலையில் தான் விஜய்யின் நிலைப்பாடு அஜித்துக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

’முந்தைய அஜித் எப்படி இருந்தார் தெரியுமா’

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அஜித் சிங்கப்பூரில் சென்று செட்டில் ஆக நினைத்தார். அதன்பின் அவர்கள் தரப்பில் இருந்து எனக்கு போன் செய்து அவர்களை நம்பி பல்வேறு படங்கள் இருக்கிறது என்று சொன்னார்கள். அதன்பின், இப்போது ஐரோப்பிய நாடுகளில் செட்டில் ஆக அஜித் மும்முரம் காட்டி வருகிறார். அஜித்தைப் பொறுத்தவரை தான் ஃப்ரீயாக இருக்கவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். இதுக்கு முன்பு இருந்த அஜித் வேறு. முன்னர், கடைசி நேரத்தில் அஜித்தின் படங்கள் ரிலீஸில் NOC கிடைக்காமல் சிக்கலில் மாட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் தனது பணத்தைக் கொடுத்து, படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார், அஜித்.

மங்கத்தாவுக்குப் பின், அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டார். அசல் படத்துக்குப் பின், எந்த புரோமோசனிலும் கலந்துகொள்ளவில்லை. 2010-ல் அவர் ஒரு வார பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தது தான், அவரது கடைசிப்பேட்டி. இப்படி மாறிய அஜித் மொத்தமாக மாறிவிட்டார். அப்போது இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் மறைவு ஆகியோரின் மறைவுக்கு ஏன் அஜித் வரவில்லை என்று விமர்சனம் எழுந்தது. ஆச்சி மனோரமாவின் இறுதி ஊர்வலம், ஈழத்தமிழர் போராட்டம் ஆகியவற்றில் மட்டும் அஜித் கலந்துகொண்டார். அதன்பின், அஜித் முற்றிலுமாக சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். அஜித்துக்கு சினிமா மீது ஒரு அயற்சி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பைக்கிலேயே உலக டூர் பண்றது பற்றி அறிக்கை வந்ததும், அவரது நண்பர்கள் சொல்லி திரும்பவும் அஜித்தை சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இந்நிலையில் இரண்டு படங்கள் இன்னும் முடியாத நிலையில், அஜித் கார் ரேஸ் ரிகர்சலில் ஈடுபடுவது அஜித்துக்கு தன் துறை மீது அயற்சி வந்ததையே காட்டுவதாக இருக்கிறது. மேலும் தன் சகப்போட்டியாளர் நண்பர் விஜய் அரசியலுக்குப் போய்விட்டால், அந்த இடம்வெற்றிடமாக இருப்பதால், அஜித்தும் தன்னை குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது' என மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

நன்றி: ஆகாயம் தமிழ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.