“சாதியும் மதமும் உங்களை… பயணமும் ஒரு வகை கல்விதான்” - வெளியே வந்த ரியல் அஜித்குமார்!; வாயை பிளக்கும் ரசிகர்கள்!
AjithKumar: சாதியும் மதமும், நாம் சந்திக்காத மனிதரை கூட வெறுக்க வைத்து விடும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. - அஜித்குமார்!
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கும் அஜித்குமார், தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ ‘பஹீரா’ ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித், பயணம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சாதியும், மதமும்
அந்த வீடியோவில் பேசி இருக்கும் அஜித், “ மக்கள் பயணம் செய்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் என்னைப் பொருத்தவரை பயணமும் ஒரு வகை கல்விதான். மதமும், சாதியும் நாம் சந்திக்காத மனிதரை கூட வெறுக்க வைத்து விடும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது.
அந்த பழமொழியை நான் ஏற்கிறேன். காரணம், நாம் அதில் அடையாளப்பட்டு சிக்கிக்கொள்ளும் போது, நாம் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட சந்தேகத்திற்கு உள்ளாக்குவோம். ஆனால், நீங்கள் பயணம் செய்யும் போது, புது வித கலாச்சாரத்தை தெரிந்து கொள்வீர்கள். பல நாட்டு மக்கள் மற்றும் மதத்தினர் உடன் உரையாடுவீர்கள். அப்போது நீங்கள் அவர்கள் மீது அனுதாபம் கொள்வீர்கள். இது உங்களை அதிக புரிதல் உள்ள மனிதராகவும், இரக்கமுள்ள மனிதராகவும், உங்களை மேம்பட்ட மனிதராகவும் மாற்றும்.” என்று பேசி இருக்கிறார்.
ஆர்வம் ஒன்றே மூலதனம்
முன்னதாக, சினிமாத்துறையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் ரசிகர்கள் மன்றங்களை கலைத்த நடிகர் அஜித்குமார் தன் படம் தொடர்பான புரோமோஷன்களில் கூட கலந்து கொள்வதை தவிர்த்தார். இதனால் அவரை பார்ப்பதே அபூர்வமான விஷயமாக மாறிவிட்டது. இதனால் அஜித் தொடர்பான எந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வந்தாலும், அது வைரல் ரகமாக மாறும்.
இதற்கிடையே, ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார் அஜித். அந்த பயணத்தில், இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர் பைக்கிலேயே பயணம் செய்தார். அது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ரகமாக மாறின.
இந்த நிலையில் ‘ஏகே’ என்ற மோட்டார் சுற்றுலா நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதன் பின்னர் அது ‘வீனஸ்’ மோட்டார் சுற்றுலா நிறுவனமாக மாறியது. இந்த நிறுவனத்தை புரோமோட் செய்யும் விதமாகவே அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இன்னும் அவர் தரப்பில் இருந்து பல்வேறு வீடியோக்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் அஜித் புதிய கார் அணியை அவர் தொடங்கியுள்ளதாக அவரது மேனஜர் சுரேஷ் சந்திரா அறிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில் "கார் பந்தய அணியின் உரிமையாளர் என்பதை கடந்து, கார் ரேசிங்கிக்கும் திரும்பியுள்ளார் அஜித்குமார்.
சர்வதேச அரங்கில் எஃப்ஐஏ சாம்பியன்ஷிப்பில் கார் பந்தயத்தில் ஈடுபடும் மிகச் சில இந்தியர்களில் அஜித்தும் ஒருவராக திகழ்கிறார். அவர் 2004 ஃபார்முலா ஆசியா BMW F3 சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார் மேலும் அவர் 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அஜித்தின் புதிய ரேசிங் அணி பல்வேறு சர்வதேச பந்தயத் தொடர்களில் ஈடுபடும். அதன்படி @24hseries, @porsche ஐரோப்பிய சீரிஸ், 992 GT3 cup பிரிவிலும் பங்கேற்கும். திறமையான இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பும், முழு ஆதரவு அளிக்கும் பந்தயத் திட்டத்தை வழங்குவதை மிகப்பெரிய நோக்கமாக இருக்கும்" என தெரிவித்து இருந்தார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்