விக்னேஷ் சிவன் நயனுக்கு புஷ்பா புருஷன்தான்... அவர் டைரக்டர்னு சொன்னா யாருக்காவது..' - பிஸ்மி
ஐயா படத்திற்காக அவரை ஆடிஷன் செய்வதற்காக, இங்குள்ள பி.ஆர்.ஓ ஒருவர் அழைத்தார். - பிஸ்மி
நடிகை நயன்தாரா தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அந்த பேட்டியில், நயன்தாரா வலைபேச்சு சேனலை குறிப்பிட்டு, அதில் பேசுபவர்களை குரங்குகள் என்று மறைமுகமாக சாடி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பத்திரிக்கையாளர் பிஸ்மி பிஹைண்ட் டாக்கீஸ் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
குரங்குகள் என்று கூறி இருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் பேசும் பொழுது, ' நயன்தாரா எங்களை, தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், குரங்குகள் என்று கூறி இருக்கிறார். நயன்தாரா சம்பந்தமான பல சம்பவங்கள் எங்களுக்கு தெரியும். இதையெல்லாம் நாங்கள் வலைப்பேச்சு சேனலில் கூறுவது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன்.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், ஐயா படத்திற்காக அவரை ஆடிஷன் செய்வதற்காக, இங்குள்ள பி.ஆர்.ஓ ஒருவர் அழைத்தார். அப்போது அவர் பேருந்தில்தான் சென்னை வந்து இறங்கினார். பிஆர்ஓ இங்கிருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவரை ஆடிஷன் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார். இப்படி பல சம்பவங்களை நாங்கள் வலைபேச்சு சேனலில் பேசியிருக்கிறோம்.
அதனால்தான் அவர் அப்படி நடந்து கொண்டார் என்றும் புரிந்து கொள்கிறேன். ஆனால் வலைப்பேச்சு சேனலை பார்ப்பவர்களுக்கு எங்களுடைய நேர்மை நன்றாகவே தெரியும்.
அறிவாளியிடம் பணம் இருக்காது.
பொதுவாக அறிவாளியிடம் பணம் இருக்காது, பணம் இருப்பவர் அறிவாளியாக இருக்க மாட்டார் என்றெல்லாம் கூறுவார்கள். நயன்தாராவின் புருஷன் என்ற அடிப்படையில் விக்னேஷ் சிவனிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை அவர் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்ய நினைப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
இதற்கிடையே, பாண்டிச்சேரி சென்று அங்குள்ள அரசு ஹோட்டலை விலை பேசி இருக்கிறார் என்பது தொடர்பான செய்திகள் வெளியாகின. அதை பார்க்கும் பொழுது, அரசு சொத்தை தனிநபர் வாங்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்தான் விக்னேஷ் சிவன் என்பது தெரியவருகிறது. நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ' படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் போலதான்.
காரணம் என்னவென்றால், அவர் நயன்தாராவின் புருஷன் என்ற விசிட்டிங் கார்டை வைத்து பாண்டிச்சேரி அரசை தன்வச படுத்த முயன்றிருக்கிறார். விக்னேஷ் சிவன் ஒரு இயக்குநர் என்றால் யாருக்குமே தெரியாது. ஆனால் அதுவே அவர் நயன்தாராவின் புருஷன் என்பதால்தான் எல்லா கதவுகளும் திறக்கின்றன. அதை பயன்படுத்தி இவ்வழியில் அவர் பணம் சம்பாதிக்க நினைப்பது என்பது மிகவும் தவறான விஷயம் என்று நினைக்கிறேன்.' என்று பேசினார்.
டாபிக்ஸ்