‘சூர்யா இப்போ செஞ்சதும் தப்புதான்.. அங்க குடும்பத்துக்கே வன்மம் ரொம்ப அதிகம்..’ சேகுவேரா பளீச்
சினிமாவில் ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவரும் வன்மத்தை வைத்துக்கொண்டு பேசுபவர்கள். அதிலும் சூர்யாவின் குடும்பத்திற்கு வன்மம் மிக அதிகம் என பத்திரிகையாளர் சேகுவேரா பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா, பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின், பாதியிலேயே வெளியேறி விட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையிலான உறவு முறிந்ததாக பலரும் பேசி வந்த நிலையில், பாலாவின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சூர்யா கலந்துகொண்டு பாலாவை புகழ்ந்து பேசினார்.
சூர்யாவிற்கு தன்னடக்கம்
இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா கிங்ஸ்வுட் டிவி எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சூர்யா குறித்து பல கருத்துகளை முன் வைத்துள்ளார்.
அந்தப் பேட்டியில் "சூர்யாவிற்கு பாலா வாழ்க்கை குடுத்தாருன்னு எல்லாம் சொல்ல முடியாது. அவரு வாய்ப்பு கொடுத்துருப்பாரு. அதை சரியா பண்ணி வளந்துருப்பாங்க. சூர்யா பாலாவ பாராட்டி பேசுனாறுனா அது அவரோடு தன்னடக்கம்.
இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை
சூர்யா பாலாவோட வணங்காண் படத்துல நடிக்காம போனதுக்கும், சுதா கொங்கராவோட புறநானூறு படத்துல நடிக்காம போனதுக்கும் காரணம் கங்குவா தான். அந்த படிப்பினைக்கு பிறகு சூர்யாவுக்கு ஞானம் வந்திருக்கும். கங்குவா தோல்வி சூர்யாவை பக்குவப்படுத்தியதால் தான் பாலாவின் விழாவிற்கு வந்தார். சூர்யா இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்பட்டு தான் பான் இந்தியா படம்ன்னு கங்குவாக்கு ஓகே சொன்னாரு. இதுல 2 வருஷம் வீணா தான் போச்சு.
சூர்யா இப்போ பண்ணுனதும் தப்பு தான்
சூர்யாவுக்கு ஜோதிகாவையும் அவரோட குடும்பத்தையும் சரியா பேலன்ஸ் பண்ணத் தெரியல. வணங்கான் படம் ஏதோ கருத்து சொல்வது சிவக்குமாருக்கு தெரிஞ்சதால தான் சூர்யாவ சமாதானம் படுத்திருக்கனும்.
சூர்யா இப்போ அவரோட 45வது படத்துக்கு கால்ஷீட் கொடுத்தது கூட தப்பு தான். 2 மாசம் கேப் விட்டு இதெல்லாம் சூர்யா பண்ணிருக்கனும். ஆர்.ஜே. பாலாஜி ஒரு கிறுக்கன். அவரோட சொர்க்கவாசல் படம் கூட சரியா போகல.
வன்மத்த வச்சிட்டு பேசுறாங்க
ரஜினில தொடங்கி சிவகார்த்திகேயன் வரைக்கும் உள்ளுக்குள்ள வன்மத்தை வச்சிட்டு வெளியில சிரிச்சு பேசுறவங்க தான். இது சிவக்குமார் குடும்பத்துக்கு கொஞ்சம் கூடுதலாவே இருக்கு. இதுக்கு பல உதாரணங்கள் இருக்கு.
சினிமாவுல நம்பர் 1, நம்பர் 2 போட்டி ரஜினிக்கும் விஜய்க்கும் தான் இருக்கு. இந்த போட்டியில அஜித் பங்கெடுத்துக்க கூட விரும்பல. அதபத்தி அவர் கவலைபடவும் இல்ல.
விஜய் முழுசா அரசியலுக்கு போயிட்டாருன்னா அந்த ரெண்டாவது இடத்துக்கு நிறைய போட்டி இருக்கு. அது சூர்யாவா, சிவகார்த்திகேயனா, விஜய் சேதுபதியா, தனுஷா, சிம்புவான்னு போட்டி நீடிச்சிட்டே இருக்கு என்றார்.
வாழ்க்கையே நீங்க குடுத்தது
முன்னதாக, பாலா 25 நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா கடந்த 2000 ஆம் ஆண்டு, நெய்க்காரன் பட்டியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் நான் இருந்தேன். அப்போதுதான் அந்த போன் கால் வந்தது. அந்த போன் காலுக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. பாலா சாரிடம் இருந்து அந்த போன் கால் எனக்கு வரவில்லை என்றால், இந்த வாழ்க்கை எனக்கு கிடையாது.
காரணம், நந்தா திரைப்படத்தை பார்த்துவிட்டுதான் கெளதம் காக்க காக்க படத்திற்கு என்னை அழைத்தார். அந்த படத்திற்கு பின்னர் தான் ஏ ஆர் முருகதாஸ் அவர் இயக்கிய கஜினி படத்திற்கு என்னை அழைத்தார் என பாலாவை பாராட்டி பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.