14 வயசுல சேது ஏற்படுத்திய தாக்கம்; பாலா மாதிரி படம் எடுக்கணும்னு இங்க பலபேர்.. அருண்விஜய் அண்ணன்தான் - சிவகார்த்திகேயன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  14 வயசுல சேது ஏற்படுத்திய தாக்கம்; பாலா மாதிரி படம் எடுக்கணும்னு இங்க பலபேர்.. அருண்விஜய் அண்ணன்தான் - சிவகார்த்திகேயன்!

14 வயசுல சேது ஏற்படுத்திய தாக்கம்; பாலா மாதிரி படம் எடுக்கணும்னு இங்க பலபேர்.. அருண்விஜய் அண்ணன்தான் - சிவகார்த்திகேயன்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 19, 2024 08:25 AM IST

பாலா சார் போல படம் எடுக்க வேண்டும் என்று ஊரில் இருந்து நிறைய பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். - சிவகார்த்திகேயன்!

14 வயசுல சேது ஏற்படுத்திய தாக்கம்; பாலா மாதிரி படம் எடுக்கணும்னு இங்க பலபேர்.. அருண்விஜய் அண்ணன்தான் - சிவகார்த்திகேயன்!
14 வயசுல சேது ஏற்படுத்திய தாக்கம்; பாலா மாதிரி படம் எடுக்கணும்னு இங்க பலபேர்.. அருண்விஜய் அண்ணன்தான் - சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இதில் சிவகுமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின் சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசளித்தார். இதனையடுத்து மேடையேறிய சிவகார்த்திகேயன், ‘ சேது படம் வரும் பொழுது எனக்கு 14 வயது. அந்தப் படத்தினுடைய கிளைமாக்ஸ் எனக்கு அவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்தது.

சூர்யாவுடன் பாலா
சூர்யாவுடன் பாலா

பாலா சார் படங்களை திரையரங்கில் பார்த்ததை இப்போது நினைத்து பார்க்கிறேன். அமரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக முடிகிறது என்று கூறிய போது, பிதாமகன் திரைப்படம் தீபாவளிக்கு வந்து ஹிட் அடித்தது என்று கூறினார்கள். அவரை கொண்டாடும் விழாவில், நான் இருப்பது எனக்கு பெருமை. அவன் இவன் திரைப்படத்தின் நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்வை நான் மிகவும் பயந்து பயந்து செய்தேன்.

பாலா சார் போல்

பாலா சார் போல படம் எடுக்க வேண்டும் என்று ஊரில் இருந்து நிறைய பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது திரைமொழியானது மிகவும் தனித்துவமானது. அருண் விஜய் அண்ணன்தான் நீங்கள் கண்டிப்பாக இசை வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டும் என்று கூறினார். அருண் விஜய் எனக்கு மிகவும் சீனியர் நடிகர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.