12 வயசுல காதலா.. ஆறு வருசம் லவ்.. கடைசில விட்டுட்டு போய்ட்டா? மலபார் பையன் தான் வேணுமாம்.. லவ் ஸ்டோரி சொன்ன ஜெஃப்ரி!
Bigg Boss Tamil 8 : ஜெஃப்ரி தனது காதல் கதையை அன்சிதா, தர்ஷிகா-விடம் பகிர்ந்து கொள்கிறார். இதுதொடர்பான வீடியோ டிவிட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நேற்று இரவு பிக் பாஸில் அன்சிதா, தர்ஷிகா ஜெஃப்ரி மூவரும் பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது அன்சிதா ஜெஃப்ரி-யிடம் மலையாளம் தெரியுமா என கேட்கிறார். அதற்கு ஜெஃப்ரி எப்போ அந்த பொண்ண விட்டனோ அதில் இருந்து மலையாளத்தையும் விட்டுட்டேன் என்ன சொல்கிறார்.
இதைக்கேட்டு ஷாக்கான அன்சிதா ஜெஃப்ரி இங்க வா என்ன நடந்தது என கேள்வி எழுப்புகிறார். ஆர்வமாக அன்சிதா என்ன நடந்தது என கேட்கிறார். அப்பொழுது தர்ஷிகா நீ சேச்சியை கண்டோ சேச்சி உன்னை கண்டோ பின்னே என்னாயி என மலையாளத்தில் கேட்கிறார். பின்னர் அன்சிதா நீ பறையும் எப்படி லவ் ஸ்டார்ட் ஆச்சி என்பதை சொல்லு என கேட்கிறார்.
எத்தனை வயதில் நீ காதலித்தாய்
பின்னர் அன்சிதா எத்தனை நாள் லவ் பண்ண என கேட்கிறார். அதற்கு ஜெஃப்ரி நாள் எல்லாம் அதிக நாள் தான் என சொல்கிறார். அதுதான் எத்தனை நாள் என்று சொல் என்று அன்சிதாவும் தர்ஷிகாவும் விடாமல் கேட்கிறார்கள். அன்சிதா ஜெஃப்ரி-யிடம் உனக்கு வயது இப்பொழுது 22 ஆகிறது. அப்போ எத்தனை வயதில் நீ காதலித்தாய் எத்தனை வருடங்கள் காதலித்தாய் என்பதை சொல் என்று கேட்கிறார்.
அதற்கு ஜெஃப்ரி மூணு மூணு என்ன சொல்கிறார் இதற்கு அன்சிதா மூன்று வருடமாய் என கேட்கிறார் இல்லை என ஜெஃப்ரி சொல்கிறார். பின்னர் தர்ஷிகா அப்பொழுது 33 நாட்களாக என கேட்கிறார் இல்லை என ஜெஃப்ரி சொல்கிறார். பின்னர் ஜெஃப்ரி 3 பிளஸ் 3 என சொல்கிறார். ஆறு வருடங்களாக காதலித்தாயா என இருவரும் ஷாக் ஆகிறார்கள்.
கூலாக பதில் சொன்ன ஜெஃப்ரி
அப்போ எத்தனை வயதில் இருந்து நீ காதலித்தால் என அன்சிதா கேட்க நான் 12 வயதிலிருந்து காதலித்தேன் என சொல்கிறாய். அப்பொழுது எதற்கு பேசுவதை விட்டீர் என கேட்க அதற்கு ஜெஃப்ரி அவங்க விட்டாங்க நானும் விட்டுட்டேன் என கூலாக பதில் சொல்கிறார்.
ஏன் அந்தப் பெண் உன்னை விட்டால் என அன்சிதா கேட்க அதற்கு ஜெஃப்ரி அப்பெண் மலபார் பயனை நோக்கும் என்னை நோக்கவில்லை என சொல்ல ஆறு வருடமாக அது அந்த பெண்ணுக்கு தோன்றவில்லையா? நீ என்ன செய்தாய் என அன்சிதா கேள்வி கேட்கிறார். அதற்கு ஜெஃப்ரி எங்கள் இருவரிடமும் கான்வர்சேஷன் ஒழுங்காக இல்லை என்னிடம் போன் அந்த டைம் இல்லை. அதனால் இப்படி ஆகிவிட்டது என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறுவாரா?
இந்தவாரம் நானினேஷனில் இருக்கும் ரஞ்சித்திற்கு ஆர்மியே உருவாகி விட்டது. ஓட்டிங்கும் அவருக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை செளந்தர்யாவுக்கு அதிக வாக்குகளும் அவரை தொடர்ந்து முத்துக்குமார், ரஞ்சித்துக்கு வாக்குகள் அதிகரித்துள்ளன. டேஞ்சர் ஜோனில் அருண் பிரசாத், ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ளனர். கடைசி இடத்தில் ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ள நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறுவாரா? அல்லது ஜாக்குலின் வெளியேறுவாரா என்கிற கேள்விகள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.