Manoj: ஈகோ பார்த்தால் எங்கேயுமே வேலைபார்க்க முடியாது.. எனக்கு எல்லாமே சினிமா தான்.. காத்திருக்கேன்: மனோஜ் பாரதிராஜா
Manoj: ஈகோ பார்த்தால் எங்கேயுமே வேலைபார்க்க முடியாது எனவும், எனக்கு எல்லாமே சினிமா தான் எனவும், அதற்காக காத்திருக்கேன் என்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா பேசியுள்ளார். மனோஜ் பாரதிராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரது சமீபத்திய பேட்டியைப் பகிர்ந்துள்ளோம்.

Manoj: தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் மனோஜ் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் ஒரே மகன். தேனி மாவட்டம், கம்பத்தில் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்த மனோஜ், திரைத்துறையில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், தனது தந்தை பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.
தாஜ் மஹால் என்னும் முதல் படத்திலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார். இப்படத்தில் ஈச்சி எலுமிச்சி என்னும் பாடலையும் தன் குரலில் பாடி, பலரை ஈர்த்தவர். ‘சாதுர்யன்’ என்னும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து மணம்புரிந்தவர். இத்தம்பதியினருக்கு அர்த்திகா மற்றும் மதிவதனி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மனோஜ் இயக்கிய மார்கழித்திங்கள் படம் மக்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்லவரவேற்பினைப் பெற்றது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனோஜ், ஒரு வருடத்துக்கு முன், இந்தியா கிளிட்ஸ் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியைக் காணலாம்.
மனோஜ் பாரதிராஜா அளித்த பேட்டியில், ‘எனக்கு ஆரம்பத்தில் டைரக்ஷனில் தான் ஆர்வம். அதனால் தான், மணிரத்னம் சாரோட பம்பாய் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதன்பின், அப்பாவின் ஆசைக்காக அமெரிக்கா சென்று நடிப்புப் பயிற்சி படிச்சிட்டு வந்து, நடிக்க வந்தேன்.