“குப்பையை கிளறிக்கிட்டே இருக்கக்கூடாது.. பிரேக் எடுத்து தேடுங்க.. அப்புறம் பாருங்க” - ஜெயம்ரவி!
அவர் நேரம் கொடுக்க வில்லை என்றும் பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் ஆர்த்தி மீது பல விதமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. - ஜெயம் ரவி!
(1 / 5)
“குப்பையை கிளறிக்கிட்டே இருக்கக்கூடாது.. பிரேக் எடுத்து தேடுங்க.. அப்புறம் பாருங்க” - ஜெயம்ரவி!
(2 / 5)
பிரபல நடிகரான ஜெயம் ரவி, தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவியான ஆர்த்தி, இந்த முடிவு தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது.என்றும், தான் ஜெயம் ரவியுடன் பேச அனுமதி கேட்டும்,
(3 / 5)
அவர் நேரம் கொடுக்க வில்லை என்றும் பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் ஆர்த்தி மீது பல விதமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் பதிலடியும் கொடுத்திருந்தார்.
(4 / 5)
இந்த நிலையில் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக இவரின் பிரதர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதனை புரோமோட் செய்யும் வண்ணம் ஜெயம் ரவி கலாட்டா சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பணம் பற்றியும் ரிலேஷன்ஷிப் பிரேக் அப் பற்றியும் பேசி இருக்கிறார்.நிறைய பணத்தை பார்த்து விட்டேன்அதில் அவர் பேசும் போது “ நான் சிறு வயதிலேயே நிறைய பணத்தை பார்த்து விட்டேன். என்னுடைய அப்பா வீட்டிற்கு கெட்டுகெட்டாக பணத்தைக் கொண்டு வருவார். அதை பார்த்து, பார்த்து எனக்கு சிறு வயதிலிருந்தே அதன் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.
(5 / 5)
அதே நேரம் பணம் தேவையில்லை என்பதையும் யாரும் கூற முடியாது. நான் என்னுடைய புரிதலில், அந்த பணம் எவ்வளவு இருந்தால் நீ சந்தோஷமாக இருப்பாய் என்ற கேள்வியே இங்கு முக்கியமானது. உன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால், உனக்கு பணம் இன்னும் வந்தாலும் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியாது.எனக்கு நானே இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்க பழகிக்கொள் என்று கூறிக் கொள்வேன். நம் கையில் பத்து ரூபாய் இருந்தால், அதற்கு ஏற்றார் போல செலவழிப்போம். 10 கோடி இருந்தால் அதற்கு ஏற்றார் போல நாம் செலவழிப்போம். அவ்வளவுதான்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்