Aarti Ravi : ‘தைரியமாக இருங்கள் அக்கா’.. ‘நீ மிகவும் தைரியமானவள்’ ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய பிரலங்கள்!-aarti instagram post is comforted by khushbu and singer saindavi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aarti Ravi : ‘தைரியமாக இருங்கள் அக்கா’.. ‘நீ மிகவும் தைரியமானவள்’ ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய பிரலங்கள்!

Aarti Ravi : ‘தைரியமாக இருங்கள் அக்கா’.. ‘நீ மிகவும் தைரியமானவள்’ ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய பிரலங்கள்!

Divya Sekar HT Tamil
Oct 02, 2024 09:57 AM IST

Aarti Ravi : ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு குஷ்பு மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். சைந்தவி, தைரியமாக இருங்கள் அக்கா, உங்களுக்காக என் பிரார்த்தனைகள் என கூறியிருந்தார்.

“தைரியமாக இருங்கள் அக்கா".. “நீ மிகவும் தைரியமானவள்” ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய பிரலங்கள்!
“தைரியமாக இருங்கள் அக்கா".. “நீ மிகவும் தைரியமானவள்” ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய பிரலங்கள்!

ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையில், இந்த விவாகரத்து ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று தெரிவித்தார். ஆர்த்தியின் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், அவர் இது தொடர்பாக அவசரமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறினார்.

தன்னை மோசமாக நடத்தினார்கள்

ஜெயம் ரவி, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மோசமாக நடத்தினார்கள் என்றும், 15 வருடங்களில் தன்னுடைய சொந்த வங்கி கணக்கை கூட திறக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு கூறினார். மேலும், ஜெயம் ரவி, கோவா பாடகி கெனிஷாவுடன் உள்ள உறவால் தான் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் செய்திகள் பரவிய நிலையில், ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரும் அதை மறுத்தனர்.

இந்த நிலையில், ஆர்த்தி நேற்று முன் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ”என் வாழ்க்கையில் நடந்துவரும் விஷயங்கள் பற்றி என்னை சுற்றி உள்ள பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நான் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவது எனது பலவீனத்தின் காரணமாகவோ, குற்ற உணர்ச்சியின் காரணமாகவோ அல்ல. நான் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அத்துடன் உண்மையை மறைக்க சிலர் என்னை மிக மோசமாக சித்தரித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் முயற்சி செய்துள்ளேன்.

அந்த விவகாரத்தைப் பற்றி எனக்கு தெரியாது

தெளிவாக சொல்ல வேண்டுமானால், எனது முந்தைய அறிவிப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரவி வெளியிட்ட விவகாரத்து அறிவிப்பானது எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்றுதான் கூறினேன். 

அந்த விவகாரத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று நான் கூறியதாக, என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. இவை எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் நான், ஜெயம் ரவியுடன் தனியாக கலந்துரையாட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன்

நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வின் மேல் உள்ளது. இந்த விவகாரத்தில் கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆர்த்தியின் இந்த பதிவுக்கு குஷ்பு மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் ஆறுதல் கமெண்ட்கள் அளித்தனர். சைந்தவி, “தைரியமாக இருங்கள் அக்கா, உங்களுக்காக என் பிரார்த்தனைகள்” என கூறியிருந்தார். 

குஷ்பு ஆறுதல் 

குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” எனத் தெரிவித்தார். இதற்கு முன்பு ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவை மறைமுகமாக குஷ்பு சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.