தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Trailer: சம்பவம் இருக்கு.. இன்னிக்கு 6 மணிக்கு வருகிறது ஜெயிலர் ட்ரெய்லர்

Jailer Trailer: சம்பவம் இருக்கு.. இன்னிக்கு 6 மணிக்கு வருகிறது ஜெயிலர் ட்ரெய்லர்

Aarthi V HT Tamil
Aug 02, 2023 11:37 AM IST

ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

ஜெயிலர்
ஜெயிலர்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கிறார். முன்னதாக இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதனை தொடர்ந்து தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான காவாலயா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல், ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ஹிட்டானது.

மூன்றாவது பாடலான ஜூஜூபி மேட்டர் பாடலும் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், ஜெயிலர் படம் வெளியாக இன்னும் 8 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகமால் இருந்தது. அந்த வகையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

முன்னதாக இந்த படம் தொடர்பாக அறிவிப்பு,லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம். காத்திருப்பு முடிந்துவிட்டது. அவர் வருகிறார். ஜெயிலர் ஷோகேஸ் ஆகஸ்ட் 2 வெளியாகிறது” என பதிவிட்டது.

ஜெயிலர் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல்கள் சொல்லுகின்றன.

இந்த படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்