தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Johnny Depp : முன்னாள் மனைவியின் அபராத பணத்தை ஜானி டெப் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Actor Johnny Depp : முன்னாள் மனைவியின் அபராத பணத்தை ஜானி டெப் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Divya Sekar HT Tamil
Jun 18, 2023 12:06 PM IST

நடிகர் ஜானி டெப் முன்னாள் மனைவியின் அபராத பணத்தை தானமாக கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜானி டெப்
நடிகர் ஜானி டெப்

ட்ரெண்டிங் செய்திகள்

50 வயதைக் கடந்திருந்த இவர், தன்னை விட 25 வயது குறைவான அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து கரம்பிடித்தார். இவர்களுக்கு கடந்த 2015ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு, ஒன்றரை ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான நடிகை ஆம்பர் ஹேர்ட், பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதில் நேரடியாக குறிப்பிடாமல், மறைமுகமாக தனது முன்னாள் கணவர் நடிகர் ஜானி டெப் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கட்டுரை வெளியாகி உலகம் முழுவதும் பேசு பொருளானது. இதனைத் தொடர்ந்து திரையுலகில் ஜானி டெப்பின் மார்க்கெட்டும் சரியத் தொடங்கியது.

இதையடுத்து தனது முன்னாள் மனைவி ஆம்பருக்கு எதிராக ஜானி டெப் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கிட்டதட்ட 3 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இவ்வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், ஜானி டெப் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக ஆம்பர் ஹேர்ட் நஷ்ட ஈடாக ரூ. 78 கோடியும், அபராதமாக 38 கோடி ரூபாயுமாக மொத்தம் 116 கோடி ரூபாயை (15 மில்லியன்) ஜானி டெப்புக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் நடிகர் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கி வழக்குகளை முடித்துக்கொள்ளவதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் அறிவித்தார். 15 மில்லியன் இழப்பீடாக செலுத்த உத்தரவிட்ட நிலையில் 1 மில்லியன் தான் (ரூ 8.28 கோடி) வழங்க முடியும் என்று ஆம்பர் ஹேர்ட் கூறியதை ஜானி டெப் தரப்பு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஆம்பர் ஹெர்ட் வழங்கவுள்ள ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நடிகர் ஜானி டெப் ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மேக் ஏ பிலிம் பவுண்டேஷன், தி பெயின்டட் டர்ட்டில், ரெட் பெதர், டெடியரோ சோசைட்டி மற்றும் அமசோனியா பண்ட் அலயன்ஸ் ஆகிய இந்த ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்