தமிழ் செய்திகள்  /  Entertainment  /  It Has Been 40 Years Since The Release Of Murali And Kuyili Starrer Poovilangu

40 Years of Poovilangu : வழக்கமான காதல் கதை.. புதுமுகங்கள்.. பாடல்கள் செம ஹிட்.. 40 ஆம் ஆண்டில் பூவிலங்கு திரைப்படம்!

Divya Sekar HT Tamil
Mar 23, 2024 05:45 AM IST

40 Years of Poovilangu : வழக்கமான காதல் கதை ஆனால் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டான படம் பூவிலங்கு. இளையராஜா இசையில் புகழ்பெற்ற ஆத்தாடி பாவாட காத்தாட பாடல் இடம்பிடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிறது.

பூவிலங்கு படத்தின் காட்சி
பூவிலங்கு படத்தின் காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் படத்தின் முரளி, குயிலி, மோகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமானார்கள். இப்படத்தில் இருந்து தான் மோகன் பின்னாளில் பூவிலங்கு மோகன் என அழைக்கப்பட்டார். குயிலி இந்கப் படத்துக்கு முன்னர் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்களில் நடனமாடும் பெண்ணாகவும், சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார். ஆனாக் நாயகியாக நடித்தபடம் என்றால் அது இதுதான்.

1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோக்களில் முக்கியமானவராக திகழ்ந்தார் முரளி. தமிழ் சினிமாவில் ஒரு வரையறை இருக்கிறது. அதாவது ஒரு ஹீரோ என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று. ஆனால் ஒரு சிலரோ அதனை தவிர்த்து வரையறையை மாற்றி உள்ளனர். இந்த வரையறை உடைத்ததில் ரஜினி, விஜய்காந்த் ஆகியோருக்கு அடுத்தபடியான உதாரணமாக முரளி இருக்கிறார்.

முரளி ஆரம்ப காலத்தில் அவரின் நிறம், உடல் குறித்து கேலி செய்து அவர் காதுபடவே விமர்சினம் செய்துள்ளார்கள். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் முரளி தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்தார். பக்கத்து வீட்டு நபர் போன்ற கதாபாத்திரங்களில் தோன்றி பல ஹிட் படங்களை கொடுத்தார் முரளி. இவர் இதற்கு முன்பு சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படம்தான் அவரை நாயகனாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது.

1984 முதல் 2010 வரை என 26 ஆண்டுகள் சினிமாக்களில் நடித்தார். பிறகு படவாய்ப்புகள் இல்லாதததால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக தனது பயணத்தை தொடர்ந்தார். பிறகு குணச்சித்திர நடிகையாகவும், அம்மா வேடங்களிலும் தோன்றி தனக்கென தனியொரு இடத்தை பிடித்தார் குயிலி.

பூவிலங்கு படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் மோகன். இப்படத்தில் முரளியின் நண்பனாக மோகன் நடித்து இருப்பார். இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பின்னாளில் பூவிலங்கு மோகன் என்று அனைவராலும் அழைப்பட்டார். இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது சின்னத்திரை சீரயல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். தற்போது அண்ணா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்ளும் ஹிட். இப்பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இளையராஜா ப்ளேலிஸ்டில் கண்டிப்பாக இந்தபாடல் இருக்கும். அதுதான்ஆத்தாடி பாவாட காத்தாட பாடல். இப்படம் ரிலீசாக 40ஆண்டுகள் ஆகும் இந்த தருணத்திலும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் பாடலாக மைசு குறையாத பாடலாக இப்பாடல் இருக்கிறது.

இந்த பாடல் உருவான விதமும் சுவாரஸ்யம் தான். இந்த பாடல் காட்சி குறித்து படத்தின் இயக்குனர் விவரிக்கிறார். அதில் படத்தின் நாயகி கொல்லபுறத்தில் குளிக்கிறார்.அப்போது நாயகன் கொல்ல புறத்தில் நாயகியை பார்க்க வருகிறார். அப்போது நாயகி குளித்து கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் நாயகியை பார்த்து நாயகன் பாடுகிறார். இதுதான் பாடல் காட்சி. இதற்கு ஏற்றார் போல இசையும் பாடல் வரிகளும் வேண்டும் என கேட்கிறார்.

இதற்கு ஒகே என சொல்லி இசைஞானி இளையராஜா டியூன் போடுகிறார் அதனை கேட்டு வைரமுத்து வரிகள் எழுதுகிறார். பின்னர் இந்த டியூனை பாடல் வரிகளுடன் சேர்த்து இயக்குனர், தயாரிப்பாளர் இருவரிடம் காட்டுகிறார்கள். இசையை கேட்டு அவர்கள் மெய்மறந்து போனார்கள். அந்த அளவுக்கு இசை இருந்தது. எஸ்பிபி இப்பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்கிறார்கள். பின்னர் படபிடிப்பு வேலை அதிகமாக இருந்ததால் முதலில் இப்பாடல் டிராக்கை இளையராஜா பாடியுள்ளார்.

எஸ்பிபி வந்த உடன் பாடலை பாடவைக்கலாம் என சொன்னார். ஆனால் இளையராஜா பாடலை கேட்ட இயக்குனர் தயாரிப்பாளர் இருவரும் நீங்கள் பாடியது மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் குரலில் அந்த ரொமன்ஸ் இருக்கு. எனவே நீங்களே இப்பாடலை பாடிவிடுங்கள் என சொன்னார்களாம். அதன் பிறகு தான் இளையராஜா இப்பாடலை பாடியுள்ளார். இன்று வரை இப்பாடலை கேட்டு கிரங்காதவர் இருக்க முடியாது.

இப்படத்தில் கல்லூரி மாணவனான முரளி ஒரு முரட்டு ஆளாக வளம் வருவார். இவருக்கு நல்லவர்களின் நட்பு கிடைக்கிறது. பின்னர் தன் முரட்டு தனத்தை விட்டு நல்ல மனிதனாக வாழ்கிறான். பின்னர் தன்னை நல்ல மனிதனாக மாற்றிய குயிலியை காதலிக்கிறார். பின்னர் திருமணம் செய்து கொள்கிறார். இதுதான் படத்தின் கதை. இது வழக்கமான கதை என்றாலும் புதுமுகங்களை அறிமுகபடுத்தி இந்த படத்தை வெற்றியடைய செய்து இருக்கிறார் இயக்குனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்